வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. "முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம்.. தேதி குறித்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை வரும் 12 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைக்கும் இந்தத் திட்டத்தால் 21,70,454 பேர் பயன்பெறுவார்கள். மாதம் தோறும் 2வது சனி மற்றும் ஞாயிறு அன்று 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தாயுமானவர் திட்டம். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே ஏழை எளிய குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பது தான்.
கல்வி, மருத்துவம், தொழில் வாய்ப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் தாயுமானவர் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தாயுமானவர் திட்டம் மூலம் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை வரும் 12 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மாதம் தோறும் 2வது சனி மற்றும் ஞாயிறு அன்று 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்! ஆகஸ்ட் 12 தொடங்கி வைக்கிறேன்...
16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று Door Delivery!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications