மிகப்பெரிய போஸ்டிங்.. ஸ்டாலின் கைக்கு போன லிஸ்ட்.. புதிதாக இறக்கப்படும் டீம்.. பரபரக்கும் "கோட்டை"
பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
சென்னை: தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலியாக உள்ளது. தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

மாற்றம்
அவர்கள் பணியில் சேர்ந்து வருடம், அவர்களை பணியாற்றிய துறைகளின் அனுபவம் ஆகியவற்றை வைத்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுது. 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதன்பின் குடியரசுத் தினம் முடிந்ததும் மேலும் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம் ஆட்சியராக பழனி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் மாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மேகநாத ரெட்டி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலியாக உள்ளது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடந்தும் கூட இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்கவே இல்லை. பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நியமனம்
இதற்காக ஒரு டீம் களமிறக்கப்படும். அதாவது ஒரு தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். அவருடன் 4 ஆணையர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படுவார்கள். இது போக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இதில் ஆணையர் மற்றும் ஆணைய உறுப்பினர்களின் தேர்வுதான் இன்னும் நடக்கவில்லை. இதற்கான ஆலோசனைகள்தான் நடந்து வருகின்றன. இந்த குழுவில் இடம்பெற அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி டீம் தயார் செய்தது.

ஸ்டாலின்
இவர்களின் லிஸ்ட் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த லிஸ்ட் பிடி தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். அவருடன் 4 ஆணையர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படுவார்கள். இது போக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இதில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தலைமை செயலாளராக இருக்கும் வெ இறையன்பு மே மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் நல்ல அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது,.












Click it and Unblock the Notifications