நாளை மும்பை விரையும் ஸ்டாலின்.. ராகுல் யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு! குவியும் தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை மும்பையில் நடைபெற உள்ளது. இதில் ‛இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை விமானத்தில் மும்பை புறப்பட்டு செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்டாலின் நாளைய தினமே மீண்டும் சென்னை திரும்ப உள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), ஆர்ஜேடி உள்பட 25 கட்சிகள் உள்ளன. முதலில் ஒற்றுமையாக இந்த கூட்டணி செயல்பட்டு வந்தது.

CM Stalin to visit Mumbai tomorrow and participate the rally to conclude Rahul Gandhi s Bharat Jodo Nyaya Yatra

அதன்பிறகு பிளவு ஏற்பட தொடங்கியது. இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதீஷ்குமார் விலகி பாஜகவுடன் இணைந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் தனியே அவர் வேட்பாளர்கைள நிறுத்தி உள்ளார். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் ராகுல் காந்தி தனது 2 வது யாத்திரையை கடந்த ஜனவரியில் தொடங்கினார். 15 மாநிலங்களில் மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக யாத்திரைக்கு திட்டமிடப்பட்டது. ஜனவரி மாதம் 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை மும்பையில் முடிவடைய உள்ளது. மொத்தம் 66 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 6,713 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிக்கிறார்.

இந்த யாத்திரையானது மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை கடந்து நேற்று மகாராஷ்டிராவில் நுழைந்தது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கும் அழைப்பு வந்துள்ளது. இதனால் நாளை மாலை 7 மணிக்கு மத்திய மும்பையில் தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதற்காக நாளை முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் மும்பை புறப்பட்டு செல்ல உள்ளார். நாளை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் அதன்பிறகு உடனடியாக சென்னை திரும்புகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்) தலைவர் சரத்பவார் உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+