நகர பேருந்துகளில் திருநங்கைகளுக்கும் இலவச பயணம்.. விரைவில் அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நகர பேருந்துகளில் திருநங்கைகளுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 23 ஆவது முதல்வராக திமுகவின் 3ஆவது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். நேற்றைய தினம் அவர் முதலில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வரவேற்பு
அதில் முக்கியமானது நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்பச் செலவு
இதன் மூலம் சேமிப்பாகும் பயணக் கட்டணம் குடும்பச் செலவிற்கு கைகொடுப்பதாக சொல்கிறார்கள். பெண்களை போல் நகர பேருந்துகளில் திருநங்கைகளுக்கும் இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என ட்விட்டரில் அவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
|
முதல்வர்
இந்த கோரிக்கைகள் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றது. அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.

அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் திருநங்கைகளும் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications