கலைஞர் கோட்டம்.. திருவாரூரில் கூடும் தலைவர்கள்.. அனல் பறக்கும்.. முதல்வர் ஸ்டாலின் பிளான் இதுதான்
சென்னை: கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திருவாரூர் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். பல கட்சி தலைவர்களும் திருவாரூரில் கூட உள்ளதால் அங்கு அனல் பறக்கும் என எதிர் பார்க்கலாம். 2 நாட்களுக்கு திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் தங்குவதால் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை வழியாக திருவாரூருக்கு சென்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ், பாரதி , தாம்பரம் MLA SR. ராஜா, பல்லாவரம் MLA கருணாநிதி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூர் செல்லும் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார். இன்று காலை கலைஞர் கோட்ட திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். மீண்டும் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ஆம்தேதி திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் பெயரில் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா நாளைய தினம் நடைபெறுகிறது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. விழாவையொட்டி அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் பங்கேற்று கவிதை வாசிக்கின்றனர்.
அதன் பிறகு, மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்து நடத்துகிறார். இதில் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதாஜவகர், ராஜா ஆகியோரும் எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர். பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மாலதி லக்ஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெற உள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர்கள் உருவச் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். பாஜகவிற்கு எதிராக கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து வரும் நிலையில் அங்கு அரசியல் பேச்சுக்களால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 20ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தர உள்ளனர். ஹெலிகாப்டர் இறங்கி ஏறுவதற்கு வசதியாக திருவாரூர் வா.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தரும் பீகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அங்கிருந்து கார் மூலம் காட்டூர் சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து பீகார் செல்கின்றனர்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை.. அறந்தாங்கி தொகுதியில் சீட் கேட்டு காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications