“அரசு ஊழியர்கள் மீதான அக்கறை அதிமுக ஆட்சியில் ஏன் இல்லை?” எடப்பாடியிடம் நேரடியாக கேட்ட ஸ்டாலின்!
சென்னை: அரசு ஊழியர்கள் மீது அதிமுக ஆட்சியில் அக்கறை காட்டாதது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பி இருக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அதிமுக ஆட்சியில் செய்ததை போல் சிறையில் அடைக்கவில்லை என்று கூறிய ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா, எஸ்மா சட்டங்களை அதிமுக கொண்டு வந்தது என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சட்டசபை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக எம்எல்ஏ தங்கமணி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

அதில் ஸ்டாலின் பேசுகையில், அதிமுக எம்எல்ஏ தங்கமணி அக்கறையோடு அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை? ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட 95 சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம். அரசு ஊழியர்கள் போராடுவது அவர்கள் உரிமை.
ஆனால் அதிமுக ஆட்சியை போல் நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை.. சிறையில் அடைக்கவில்லை. அரசு ஊழியர்களின் போராட்டங்களை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களை கொச்சப்படுத்தி பேசியது எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சனையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால் தான் கோட்டையில் எனது அறைக்கே வந்து எனக்கு இனிப்பு ஊட்டினார்கள்.
நாங்கள் எஸ்மா, டெஸ்மா கொண்டு வரவில்லை. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எதிர்க்கட்சியினருக்கு பிடிக்கவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டிக்காக நிறைவேற்றப்படும். மீண்டும் திமுக அரசுதான் அமையும் என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் போராடிய அரசு ஊழியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட எஸ்மா, டெஸ்மா சட்டம் குறித்து ஸ்டாலின் பேசியது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications