பொன்முடி பேசிய "ஒவ்வாத" வார்த்தை.. அவை குறிப்பில் இருந்து நீக்குங்க.. தகித்த முதல்வர்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் பொன்முடி பேசியவற்றில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
நேற்று தஞ்சாவூர் தேர் தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள். இதையடுத்து நேற்று சட்டசபையில் தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மகாமகம் குளத்தில் ஏற்பட்ட விபத்து பற்றி பேசினார். கும்பகோணம் மகாமக விழாவிலும் 48 பேர் இறந்தார்கள் என்று என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்கள் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.

பொன் முடி
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று இதற்கு பதில் அளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி சில கருத்துக்களை இன்று தெரிவித்தார். அதிமுகவை விமர்சனம் செய்து சில கருத்துக்களை பொன் முடி பேசினார். அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சட்டசபையில் பேசிய கருத்துக்களை படித்துக்காட்டி பொன்முடி சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் பொன் முடி பேசிய கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கும்படி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
அமைச்சர் பொன்முடி பேசியவற்றில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதில் கடந்த காலங்களில் சட்டசபையில் நடைபெற்று இருக்க கூடிய, சட்டசபையில் பேசி இருக்க கூடிய சில விஷயங்களைத்தான் இன்று அமைச்சர் பொன் முடி பேசினார். அவை குறிப்பில் ஏற்கனவே இருக்கும் சில விஷயங்களைதான் அவர் பேசினார்.

கோரிக்கை
ஆனால் முந்தைய காலங்களில் அதே விஷயங்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிக்கைகளை வைத்து இருக்கிறோம். இன்று அதே விஷயத்தைதான் அமைச்சர் பேசி இருக்கிறார். அதனால் இன்று நடைபெற்று இருக்க கூடிய விவாதத்தில் அமைச்சர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் தேவை இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. எனவே அவர் பேசியவர்களின் பெயர்கள் இருக்கட்டும், ஆனால் அவை குறிப்பில் அவர் பேசிய சில ஒவ்வாத விஷயங்களை மட்டும் மாற்ற வேண்டும்.

கருணாநிதி பதில்
முன்பே திமுக எதிர்க்கட்சியாக இருந்த இதை பற்றி அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற பிரச்சனை வந்தது. அப்போதைய எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி, இருக்கட்டும்.. அவர்கள் அவை குறிப்பில் இருந்து அவர்கள் நீக்கவில்லை என்றால் பிரச்சனை இல்லை. அவர்களுக்கு என்ன தகுதி, நமக்கு என்ன தகுதி என்று நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுதான் என் கருத்தும். இந்த மன்றம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும்.

ஜனநாயகம் முக்கியம்
எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். எனவே அதை முன்னிட்டு அவைக்கு தகாத வார்த்தைகளை சபாநாயகர் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் பொன்முடி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார் சபாநாயகர் அப்பாவு.

அப்பாவு பதில்
அப்பாவு அளித்த பதிலில், முதல்வரின் பேச்சு அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. நீங்கள் பெருந்தன்மையாக பேசி உள்ளீர்கள். அந்த அடிப்படையில் தவறான வார்த்தைகளை நான் பார்த்து நீக்கிவிடுகிறேன். உங்கள் கோரிக்கையை ஏற்று அதன்படி உள்ளே இருக்கும் கருத்துக்களையோ நீக்கிவிடுகிறேன் என்று அப்பாவு தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications