கருப்பு சிவப்பை கொடியில் தாங்கியிருக்கும் நல்வரவு- நல்லுறவு! தேமுதிகவை வரவேற்ற ஸ்டாலின்
சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk
அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணியில் இணைய போகிறது என்பது குறித்து தினந்தோறும் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. கடந்த ஜனவரி 9ஆம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பதாக சொன்னார் பிரேமலதா. ஆனால் அறிவிக்கவில்லை.
பொங்கல் கழித்து, கடலூர் மாநாடு என தேமுதிக நாட்களை கடத்தி வந்த நிலையில் அதிமுகவுடன் இணையும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்று திடீர் ட்விஸ்ட்டாக இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சென்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இதை முதல்வர் ஸ்டாலினும் பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 19, 2026
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத்… pic.twitter.com/n7qD7Ex8UH
அவர் கூறுகையில், "திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை உறுதி செய்கிறோம். எங்களுடைய கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் திமுகவுடன் கூட்டணி வைப்பதைத் தான் விரும்பினார்கள்.
கேப்டன் இல்லாத நேரத்தில் இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறது. 2016-ல் இந்தக் கூட்டணி அமைய வேண்டியது. கலைஞர் ஐயா பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று சொன்னார்.
ஆனால் 10 வருடங்கள் கழித்து தாமதமாக இந்தக் கூட்டணி உறுதியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். எத்தனை நம்பர், யார் வேட்பாளர்கள், எந்தத் தொகுதி என்பது எல்லாம் குழு அமைத்து இரண்டு கட்சிகளும் பேசி முடிவு எடுக்கும். அதனை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications