இது லிஸ்டுலேயே இல்லையே.. பாஜகவின் கோட்டையில் கால் வைக்க முடிவு.. ஸ்டாலினுக்காக தயாரான ஸ்பெஷல் பிளான்
சென்னை: லோக்சபா தேர்தலில் பெரும்பாலும் அடுத்த வாரம் சில நாட்கள் வட இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இதற்கான சிறப்பு திட்டம் தயாராகி வருகிறதாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் பணிகள் காரணமாக தொடர்ந்து களத்தில் இருந்தவர் தற்போது ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார்.

கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிளான் மாற்றம்; முதலில் கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.
கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார்.
குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 - ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்ததாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
பிளான் மாற்றம்: ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஸ்டாலின் ஒப்புக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆலோசனையில் மாலத்தீவு ப்ரோக்ராம் வேண்டாம் என சொல்லி விட்டார். அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். இதனையடுத்தே கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வெடுத்து வரலாம் என திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு பின் திட்டம்; கொடைக்கானல் சென்று திரும்பிய பின் 1 வாரத்திற்கு பின் ஸ்டாலின் வட இந்தியாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஜூன் 4ம் தேதி வரை திட்டங்கள் எதையும் தொடங்க முடியாது, அறிவிக்க முடியாது என்பதால் ஸ்டாலின் பெரிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது.
அதன் காரணமாக தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட உள்ளார். இவர் 1 வாரம் விடுமுறையை கழித்த பின் மீண்டும் தமிழ்நாடு வந்து அதன்பின் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவார். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்காக 2 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசம் தேர்வாகி உள்ளதாம். மகாராஷ்டிரா, பஞ்சாப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். அதேபோல் டெல்லியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாம்.
அவருக்கான பிரச்சார திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மே 7ம் வாரம் அவர் வடஇந்தியாவில் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கலாம் என்கிறார்கள். அதற்கு முன் இவர் கொடைக்கானல் பயணத்தை முடித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
அங்கே என்ன மாதிரியான விஷயங்களை பேசலாம், திமுக கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து திட்டங்களை பற்றி பேசுவது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications