வந்தாச்சு அறிவிப்பு.. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் டிச.30ல் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னையில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் சென்னை புறநகரில் பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக பஸ் நிறுத்தத்துடன் கூடிய முனையம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
இதையடுத்து 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் முனையம் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணி முடிந்த நிலையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா தள்ளிப்போனது. இதற்கிடையே தான் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் மழை வெள்ளம் வெளியேற முடியாமல் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மீண்டும் பஸ் நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டது. சுமார் 1,200 மீட்டர் தூரத்துக்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும் பஸ் சோதனை ஓட்டமும் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் தான் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 30ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பால் பஸ் நிலையம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தாமல் எளிய முறையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 30ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைத்து பேட்டரி வாகனத்தில் சுற்றி பார்க்க உள்ளார். அதன்பிறகு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் சென்னையில் வாகன நெரிசல் ஓரளவு கட்டுக்குள் வரும் என மக்கள் நம்புகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications