ஆளுநர் நடவடிக்கையை நிராகரிக்கிறோம்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுவார்.. தங்கம் தென்னரசு தடதட!
சென்னை: அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை, அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநரின் நிலை தவறு என்பதை விளக்கி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று கடிதம் அனுப்பினார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, அந்த உத்தரவை நிறுத்தி வைத்து, அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஆளுநர் ரவி.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்தது.
தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், "ஒரு அமைச்சரவையில் அமைச்சரை சேர்க்கவோ நீக்கவோ முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. யாருடைய அறிவுரையையும் கேட்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுத்துள்ளார் ஆளுநர். ஆளுநரின் நடவடிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
முதலமைச்சருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஆளுநர் ரவி மீறியுள்ளார். இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநர் தனது விருப்புரிமையின் அடிப்படையில் யாரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது.
ஆளுநருக்கு இதுதொடர்பாக பதில் கடிதம் எழுத உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநரின் நிலை தவறு என்பதை விளக்கி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநருக்கு கடிதம் எழுதுவார்.
ஒருவர் மீது வழக்கு இருப்பதாலேயே, அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தபோதும் அவர் பதவியில் தொடர்ந்தார் என்பதையும் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன். இன்றைக்கும் மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் பலர் மீது நிலுவையில் வழக்குகள் உள்ளன. எனினும் அவர்கள் அமைச்சர்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications