கல்வித்துறை சாதனைக்கு அடித்தளம்! நல்லாசிரியர் விருது பெறும் 2 ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: 2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வாகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் தினம் தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நல்லாசிரியர் விருது என்பது வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 2 வகைகளில் நல்லசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முதலாவது என்னவென்றால் தேசிய நல்லாசிரியர் விருது. இந்த விருது என்பது மத்திய அரசால் வழங்கப்படும். மத்திய அரசு சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு செப்டம்பர் 5ம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்குவார். 2வது என்னவென்றால் மாநில அரசு சார்பில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதாகும்.
இந்நிலையில் தான் ஜனாதிபதி திரெளபதி சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் நேற்று வெளியானது. இதில் மொத்தம் 50 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை என மொத்தம் 2 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.
அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!… pic.twitter.com/FNQ9NeqiF5
— M.K.Stalin (@mkstalin) August 27, 2023
இந்நிலையில் தான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‛‛தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications