தொடரும் மீனவர்கள் கைது.. நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை உரிய அனுமதி அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொண்டு விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் தனுஷ்கோடி- தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 12 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு விசைப்படகையும் சிறைபிடித்தனர்

 12 மீனவர்கள் கைது

12 மீனவர்கள் கைது

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 8ஆம் தேதி தான், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாள்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற நிலையில், இப்போது 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 முதல்வர் கடிதம்

முதல்வர் கடிதம்

இந்தச் சூழலில், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13-2-2022) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அக்கடிதத்தில் இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிலையில், அதுகுறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும் இன்று (13-2-2022) மற்றுமொரு நிகழ்வாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பன்னிரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 பாதுகாப்பின்மை உணர்வு

பாதுகாப்பின்மை உணர்வு

12.02.2022 அன்று, IND-TN-10-MM-612 மற்றும் IND-TN-10-MM-328 ஆகிய பதிவெண்களைத் தாங்கிய இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், 13.02.2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

 பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்

பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்றும் அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கோவிட் தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் (JWG) மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துமாறும் இந்தியப் பிரதமரைக் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

மேலும், அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டுமெனக் கோரியுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்" என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+