சொந்த காரை பயன்படுத்த தொடங்கிய விஜய்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! காரின் ரேட் தலையை சுத்துதே!
சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காரை முதலமைச்சர் விஜய் பயன்படுத்தி வந்திருந்த நிலையில், விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து தனது சொந்த காரையே விஜய் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய், டிபெண்டர் காரைதான் பயன்படுத்தி வந்திருந்தார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே வகை காரைதான் பயன்படுத்தினார். எனவே, விஜய் தனது காரை மாற்றினார். டிபெண்டரிலிருந்து லேண்ட் க்ரூஸர் காருக்கு மாறினார். இங்குதான் பிரச்சனையே தொடங்கியது.

லேண்ட் க்ரூஸரால் சர்ச்சை
லேண்ட் க்ரூஸர், அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் கார். முதலமைச்சராக இருப்பவர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காரை ஏன் பயன்படுத்த வேண்டும்? அப்படியெனில் அந்த நிறுவனத்திற்கு முதலமைச்சரால் ஏதேனும் சலுகைகள் கிடைக்கிறதா? என்று கேள்விகள் எழுந்தன.
முதலமைச்சரின் கார்கள்
வழக்கமாக தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு 3 வகையான கார்கள் அரசு சார்பில் வழங்கப்படும். பெரும்பாலும் டொயோட்டா நிறுவனத்தை சார்ந்த ஃபார்ச்சூனர், இனோவா கிரிஸ்டா அல்லது ஹைகிராஸ் என 3 வகை கார்களில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படும். இந்த வகை கார்கள் தமிழ்நாட்டில் மூளை முடுக்கு எங்கும், எவ்வளவு கரடுமுரடான பாதையிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அசதியில்லாமல் பயணிக்க சிறந்தவையாக கருதப்பட்டு வழங்கப்படுகின்றன.
சொந்த காரை பயன்படுத்தும் முதலமைச்சர்கள்
இருப்பினும் முதலமைச்சர்கள் தங்கள் சொந்த காரை, பாதுகாப்பு மாற்றங்கள் செய்து பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேண்ட் ரோவர் டிபெண்டர் காரை பயன்படுத்தியிருந்தார்.
விஜய்யும் இதே போன்ற காரை பயன்படுத்தியிருந்தார். இருப்பினம் ஓரிரு நாட்களில் லேண்ட் க்ரூஸர் காருக்கு மாறினார். இதில் விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது தனது சொந்த காரான டொயோட்டா வெல்பயர் காரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார். இதன் விலை சுமார் ரூ.1.50 கோடி ஆகும்.
டொயோட்டா வெல்பயரின் சிறப்பம்சங்கள்
இந்த வகை கார்கள் பணக்காரர்களுக்கு என்றே தயாரிக்கப்பட்டது. இதன் உட்புறம் விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கையை போன்று சொகுசானதாக இருக்கும். வழக்கமாக எல்லா கார்களிலும் ஏசி இருக்கும். ஆனால், இந்த வகை காரில் ஏசியை தாண்டி, இருக்கையின் வெப்பநிலையை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்ய முடியும். அந்த அளவுக்கு உயர்தர தொழில்நுடபத்துடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பாதுகாப்பும் பக்காவாக இருக்கும். 6 ஏர்பேக்குகள், காரை சுற்றி சென்சார்கள் மற்றும் கேமராக்கள், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், வெஹிக்கில் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் என எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
இவ்வளவு இருந்தும் இந்த காரின் பவர் அசுரத்தனமாக இருக்கும். வெறும் 8.5-9 வினாடிகளில் இந்த கார் 100 கி.மீ வேகத்தை தொட்டுவிடும். எனவேதான் பெரும்பாலான பணக்காரர்கள் இந்த வகை காரை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications