நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்?
சென்னை: நாளை டெல்லி செல்லும் முதல்வர் விஜய்யின் பயண திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். எத்தனை நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், நடிகர் விஜய் முதன்முறையாக நாளை டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தத் தரைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தின் மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ள இந்த டெல்லி பயணத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமரைச் சந்திக்கும் இந்த முதல் சந்திப்பில், தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளார்.
மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேச வாய்ப்புள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்புதல் மற்றும் நிதி உதவி குறித்தும் பேசுவார்.
கல்வி நிதி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு வர வேண்டிய பிஎம்ஸ்ரீ (PM-SHRI) கல்வி நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்கக் கோருதல்.
பிரதமர் நரேந்திர மோடி மட்டுமன்றி, மத்திய அமைச்சரவையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்துத் தமிழகத்திற்கான நிதி மற்றும் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுமுறை சந்திப்புகள் ஒருபுறம் இருக்க, டெல்லியில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.
இவற்றுடன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார்.
நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படும் முதல்வரின் இந்த முதல் அதிகாரப்பூர்வப் பயணத்திற்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளைத் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
டெல்லியில் விஜய் 2 நாட்கள் தங்கியிருப்பாா் என அதிகாாிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை மாலை பிரதமா் மோடி, குடியரசு தலைவா் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை முதல்வர் விஜய் சந்திக்கிறாா். நாளை மறுநாள் சோனியா காந்தி, ராகுல், பிாியங்கா மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திப்பாா் என கூறப்படுகிறது.
முன்னதாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்காக விஜய், கடந்த ஜனவரி மாதம் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அதன் பின்னர் தற்போது 4 மாதங்கள் கழித்து முதல்வராக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Loan waiver: ரூ 75 ஆயிரம் போதாது சி.எம். சார்! பயிர்க் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ங்க! அன்புமணி -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications