அதிரடி காட்டும் விஜய்.. அவரை ஜெயிலுக்கு அனுப்பணும்.. ஃபைல்களை ரெடி பண்ணுங்க.. திமுகவிற்கு குறி?
சென்னை: தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் முன்னாள் அமைச்சர்கள் கேஎன் நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கிரீன் சிக்னல்களை கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் ஒருவரை கைது செய்யும் அளவிற்கு ஆக்சன் எடுப்பதற்கான அனுமதிகளை ஆளுநரிடம் கோர உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) எப்.ஐ.ஆர் பதிவு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டப்பூர்வ விசாரணை அனுமதி ஆகிய அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு 'டாப் சீக்ரெட்' தகவல் கசிந்துள்ளது.

கடந்த ஆட்சியில் வலம் வந்த தி.மு.க-வின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படும் மூத்த முன்னாள் அமைச்சர் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் விஜய் தரப்பு தயாராகிவிட்டதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன. "மக்களின் பணத்தைச் சூறையாடி ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறைக்கம்பிகளை எண்ணுவது உறுதி" என்பதில் முதலமைச்சர் மிக உறுதியாக இருப்பதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தீய சக்தி' முழக்கமும் தேர்தல் வாக்குறுதியும்!
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேடைகள் தோறும் முழங்கிய ஒரு விஷயம் தமிழ்நாட்டைப் பிடித்துள்ள ஊழல் மற்றும் குடும்ப அரசியலை வேரறுப்போம் என்பதுதான். ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய-மாநில புலனாய்வு அமைப்புகள் கொடுத்த ஊழல் புகார்களின் கோப்புகளை ஒவ்வொன்றாகத் தூசு தட்டத் தொடங்கியுள்ளார் விஜய்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மீதான நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில் புதிய அரசு எடுத்த வேகம், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிப் முகாமையும் அதிர வைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக இலக்கு வைக்கப்பட்டுள்ள அந்த மிக முக்கிய முன்னாள் அமைச்சர், கடந்த ஆட்சியில் பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர் மற்றும் நிர்வாக முறைகேடுகளில் நேரடியாகத் தொடர்புடையவர் என்று உளவுத்துறை மற்றும் அமலாக்கத்துறை (ED) வட்டாரங்கள் மூலமாக அரசுக்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"சிறைக்கு அனுப்பியே தீருவேன்" - கசிந்த முதலமைச்சரின் உத்தரவு:
தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரிகளுடன் அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மிகக் காரசாரமாகப் பேசியதாகத் தெரிகிறது. "தேர்தலில் நாம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி வெறும் வெற்று முழக்கம் அல்ல. முந்தைய ஆட்சியில் நடந்த மக்கள் பணக் கொள்ளையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. முறைகேடுகளில் ஈடுபட்ட அந்த முக்கியப் புள்ளியை சட்டத்தின் முன் நிறுத்தி, சிறைக்கு அனுப்ப அனைத்து வலுவான ஆதாரங்களையும் தயார் செய்யுங்கள்" என்று விஜய் அதிகாரிகளுக்குத் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியல் பழிவாங்கல் என்ற விமர்சனங்கள் எழ வாய்ப்பு உள்ளதால், எந்தவொரு சட்டப் ஓட்டைகளும் இல்லாதபடி, பக்காவான ஆவணங்களுடன் இந்த வழக்கை நகர்த்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆகியோருடன் முதலமைச்சர் தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தி.மு.க முகாமில் பரவும் திக் திக் பயம்:
நேரு மற்றும் செந்தில் பாலாஜி விவகாரத்தைத் தொடர்ந்து, தங்களின் அடுத்த விக்கெட் யார் விழப்போகிறது என்ற கலக்கத்தில் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் பலர் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, இந்த மூத்த முன்னாள் அமைச்சர் மீதான விசாரணைக்கு முதலமைச்சர் பச்சைக்கொடி காட்டிவிட்டால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னும் பழைய வழக்குகளைக் காட்டி மிரட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தரப்பு குற்றம் சாட்டினாலும், "ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்" என்ற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள விஜய் எடுக்கும் இந்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகள், மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. அடுத்த சில வாரங்களில், கோட்டை வட்டாரத்திலிருந்து வெளிவரப் போகும் அந்த 'பிக் பிரேக்கிங்' அறிவிப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது!












Click it and Unblock the Notifications