Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. தென் சென்னை மக்களின் ஏக்கம்.. அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இன்னமும் மேம்பால பணியும், ரயில் நிலைய பணிகளும் முடியாமல் உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொறுத்தவரை தமிழக அரசே 20 கோடி ரூபாய் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளது. அதன்படி பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சருமான சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான வணிக நகரம், அங்கு பேருந்து நிலையத்தின் எதிரிலேயே ரயில் பாதை போகிறது.. பேருந்து நிலையம் அமைக்கும் போதே, கையோடு ரயில் நிலையமும், மக்கள் சாலையை கடக்க மேம்பாலமும் அமைத்திருக்க வேண்டும். இதை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மக்கள் இப்போது ரயில் நிலையம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அதேபோல் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்கிறார்கள்..

CMDA Minister Sekar Babu makes announcement regarding the opening of the Kilambakkam railway station

ஜிஎஸ்டி சாலை

இந்த சாலை பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.ஏனெனில் இந்த சாலை தான் தமிழ்நாட்டில் அதிக வாகனங்கள் கடந்து மிகப்பெரிய சாலையாகும். ஜிஎஸ்டி சாலையான இதுதான் சென்னை, திருச்சியின் பிரதான சாலை. 80 சதவீத மக்கள் சென்னைக்குள் நுழையவும், வடமாநிலங்கள் செல்லவும் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். மிக மிக அதிவேகத்தில் வாகனங்கள் செல்லும் சாலையாகும்.

முக்கியமான இடம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமும் மிகவும் முக்கியமான இடமாகும். எப்படிப்பட்ட இடம் என்றால், அங்கு தான் ஒரு பக்கம் காஞ்சிபுரம் செல்லும் சாலையும், இன்னொரு பக்கம் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலையும் இணைக்கிறது. அதேபோல் கனரக வாகனங்கள் அனைத்துமே கிளாம்பாக்கத்தை தாண்டாமல் துறைமுகம் போகவே முடியாது. ஏனெனில் வண்டலூர்-மீஞ்சூர் பைப்பாஸ் அங்குதான் தொடங்குகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவும் அங்குதான் இருக்கிறது. கிட்டத்தட்ட சென்னையின் முக்கியமான சந்திப்பான இடத்தில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இவ்வளவு முக்கியமான இடத்தில் மேம்பாலங்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் சாலையை கடக்க மேம்பாலங்கள் இல்லை.. பேருந்துகள் ஊரப்பாக்கம் அல்லது வண்டலூரில் கடந்து செல்ல வேண்டும்.அங்கு அரசு ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதாக அறிவித்தது.ஆனால் பணிகள் இன்னும் வேகமெடுக்கவில்லை.. அதேநேரம் ரயில் நிலைய பணிகள் மற்றும் சற்று வேகமாக நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

சேகர்பாபு பேட்டி

வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் திரு.வி.க. நகர் பகுதியில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய அடிப்படை வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், செங்கல்பட்டில் பேருந்து நிலையம் தற்போது முழுமையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் என்ன பிரச்சனை

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகின்றன. அந்த நிலையம் தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதை விரைவில் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துதான் முடிச்சூர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பின் சில காரணங்களை முன்வைத்து அவர்கள் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுத்துள்ளனர்.

செப்டம்பரில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு

எனினும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2 அல்லது 3 மாதங்களில் திறக்கப்பட்டவுடன் இந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான ரூ.20 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே ஒதுக்கி இருக்கிறது. அந்த பணியும் முடிந்து செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+