பயணிகளுக்கு பரிசுகளை அள்ளி கொடுத்த சென்னை மெட்ரோ.. சிங்கார சென்னை கார்டு பயண போட்டி இன்னும் இருக்கு!
சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை உருவாக்கியது. இந்த அட்டையை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும், பேருந்து, புறநகர் ரயில் சேவை, சுங்கச் சாவடி, வாகன நிறுத்துமிடம் என பல இடங்களிலும் வாடிக்கையாளர்கள் இந்த அட்டையை பயன்படுத்தலாம்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் 15 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுவழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்தவகையில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரையிலான ஒரு மாத காலத்தில் அதிக முறை சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரொ ரயில்களில் பயணித்தவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்துள்ளது மெட்ரோ நிறுவனம்.
இதுதொடர்பாக மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கார சென்னை அட்டையோடு (NCMC) சராசரி நிலைக் கட்டணத்தை ஒருங்கிணைத்தது. தேசிய பொது இயக்க அட்டை கட்டண விகிதத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பயணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ஒரு மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 இல் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பயனர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி. சென்னை திரு.வி.க.பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை அதிகமுறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மு.அ. சித்திக், இ.ஆ.ப., வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் (பி&ஓ), பெனுதர் பர்ஹி, மண்டல மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி., D.C.அஸ்வத் துரை செல்வம், மார்க் மெட்ரோ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications