“கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை".. சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் விளக்கம்!
சென்னை: "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான மாநில அரசின் ரூ. 60,000 கோடி நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 32 கி.மீ தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களுடன் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதேபோல, கோவைக்கு ரூ.10,740 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), 2023 ஜூலையில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. கோவை, மதுரைக்கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறி இருந்தார்.
இதனால் வரும் 2030க்குள் மதுரையிலும், கோவையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த நவம்பர் மாதம் மதுரை, கோவை மக்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தி வந்தது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல்கள் வந்தன.
மெட்ரோ ரயில் திட்ட கொள்கையின் படி 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கமுடியும் என்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவையில் 15.84 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும், மதுரை நகர்ப்புற பகுதியில் 14.7 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்து மத்திய அரசு இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்ததாக கூறப்பட்டது. கோவை, மதுரை மெட்ரோ திட்டம் குறித்த தமிழக அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று (ஜன.11) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ரயில் என்ஜின் மூலம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முழு மெட்ரோ ரயிலையும் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சோதனை ஓட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ இயக்குநர் சித்திக், "கோவை, மதுரை மெட்ரோ திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்கக்கூடிய வகையிலான அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பும். நிலம் கையகப்படுத்த ஆய்வு செய்யக்கூடிய பணிகள் நிறுத்தப்படவில்லை. மதுரைக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் கோவைக்கும் முடிந்து விடும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications