மிக ஷார்ப்பான வளைவு.. போரூரில் நடக்கும் சுவாரசியம்.. அதுவும் டிரைவரே இல்லாமல்.. சிலிர்க்குதே
சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான முதல் ஓட்டுநர் இல்லா ரயில்களுக்கான பெட்டிகள் கடந்த வாரம் சென்னைக்கு வந்தடைந்த நிலையில் இதற்கான டெஸ்டிங் நடக்க உள்ளது. போரூரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோவில்.. உள்ள மிக ஷார்ப்பான வளைவில் இந்த சோதனை செய்யப்படும். இதையடுத்து சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
63,246 கோடி மதிப்பிலான இந்த இரண்டாம் கட்ட திட்டத்திற்காக மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் திட்டமிடப்பட்டு உள்ளது.. பெட்டிகள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு, அவை தயாரிக்கப்பட்ட ஸ்ரீ சிட்டியில் இருந்து கடந்த மாதம் புறப்பட்டு சென்னை வந்தடைந்தது.

இந்தப் பெட்டிகள் ஸ்ரீ சிட்டியிலிருந்து வெளிவட்டச் சாலை வழியாகச் சென்று பூந்தமல்லி டிப்போவை அடைந்தது.
ரயில்கள் உற்பத்தி மையத்தில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும்,.. அவை டிப்போ வந்த பின் மீண்டும் ஒரு விரிவான சோதனைக்கு உட்படுத்தப்படும். ஒவ்வொரு பயணத்திலும் சுமார் 1,000 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில்கள் நிலையான வடிவமைப்பு கொண்டது. அதோடு கடுமையான சோதனைகளைத் தாங்கும் திறன் கொண்டது. பிரேக்குகள், வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், லைட்டிங், சர்க்யூட்கள், பேண்டோகிராஃப் மற்றும் பிறவற்றின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை முதல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் இதுபோன்ற கூடுதல் ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்: சென்னை போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதன் ரூட் கட்டி முடித்த பிறகு விரைவில் மெட்ரோ சேவை தொடங்கும்.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications