ஆவடி வரை இனி சல்லுன்னு போகலாம்.. மெட்ரோவால் பல மடங்கு உயரப்போகும் நிலத்தின் மதிப்பு.. பல கோடி லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட உள்ள மெட்ரோ காரணமாக சென்னையில் முக்கியமான இடங்களில் நிலத்தின் மதிப்பு புதிய உச்சத்தை அடையும் வாய்ப்புகள் உள்ளன.

பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட உள்ள மெட்ரோவிற்கான டிபிஆர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இதனால் மெட்ரோ நீளம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் லைன் அல்லது லைன் 5 சென்னை மெட்ரோவின் திட்டமிடப்பட்ட பாதைகளில் ஒன்றாகும். இது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்,

44.6 கிமீ (27.7 மைல்) நீளமுள்ள இந்த பாதையில் 45 நிலையங்கள் இருக்கும், அவற்றில் ஆறு நிலையங்கள் நிலத்தடியிலும் 39 நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாலத்திலும் இருக்கும். கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தின் கிளைப் பாதை, லைன் 5B என அழைக்கப்படும். 21.76 கிமீ (13.52 மைல்) கிளைப் பாதை 19 உயர்த்தப்பட்ட நிலையங்களைக் கொண்டிருக்கும்.

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) முடிந்துள்ளதால் இனி ஒப்புதல்களுக்காக காத்திருந்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பட்டாபிராமில் ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தியக்கூறு ஆய்வு வெற்றி பெற்றால், ஒரு மாதத்திற்குள் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கோயம்பேடு முதல் ஆவடி வரை முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை பட்டாபிராம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்மொழியப்பட்ட இந்த நீட்டிப்பு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நகரின் புறநகர் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு பட்டாபிராம் பகுதியில் வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

CMRL sumbiteed DPR for Koyambedu to Pattabiram metro link Land Value to increase

நிலையங்கள் என்னென்னெ?

கோயம்பேடு

பாடி புது நகர்

பூங்கா சாலை

கோல்டன் ஃப்ளாட்ஸ்

வேவின்

அம்பத்தூர் எஸ்டேட்

டன்லப்

அம்பத்தூர் ரயில் நிலையம்

அம்பத்தூர் ஓ.டி

ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனை

திருமுல்லைவாயல்

வைஷ்ணவி நகர்

முருகப்பா கல்லூரி

ஆவடி

இந்துக் கல்லூரி

பட்டாபிராம்


மெட்ரோ விரிவாக்கம்:

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான நீளம் 16.1 கிமீ ஆகும், இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிமீ ஆக அதிகரிக்கும். திட்டத்திற்கான கட்டுமான செலவு சுமார் ரூ. 6,500 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த விரிவாக்கத்தில் சுமார் 15 ஸ்டேஷன்கள் அமைக்கப்படும், மேலும் ஆவடியில் அல்லது பட்டாபிராமில் வெளிவட்ட சாலைக்கு (ORR) அருகில் உள்ள காலி நிலத்தில் மெட்ரோ டிப்போ கட்டப்படும். கோயம்பேடு, பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயல், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது மொகப்பையர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நகரின் புறநகர் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதோடு போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​சென்னையில் 54 கி.மீ., தூரத்திற்கு இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் உள்ளன, தினமும் 3.20 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில், 35.53 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர், 2024 இல் மட்டும் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் மாறும்

கோயம்பேடு பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட உள்ள மெட்ரோ காரணமாக சென்னையில் முக்கியமான இடங்களில் நிலத்தின் மதிப்பு புதிய உச்சத்தை அடையும் வாய்ப்புகள் உள்ளன.

கோயம்பேடு - 30% நிலத்தின் மதிப்பு உயரும்

பாடி புது நகர் - 30% நிலத்தின் மதிப்பு உயரும்

அம்பத்தூர் எஸ்டேட் - 45% நிலத்தின் மதிப்பு உயரும்

அம்பத்தூர் ரயில் நிலையம் - 40% நிலத்தின் மதிப்பு உயரும்

திருமுல்லைவாயல் - 40% நிலத்தின் மதிப்பு உயரும்

ஆவடி - 50% நிலத்தின் மதிப்பு உயரும்

இந்துக் கல்லூரி - 50% நிலத்தின் மதிப்பு உயரும்

பட்டாபிராம் - 50% நிலத்தின் மதிப்பு உயரும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+