Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகைகடன் உள்பட தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மேஜர் மாற்றம்.. கூட்டுறவுத்துறை சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல் அனைத்து வகை கடன்களையும் உயர்த்தி வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் உள்ள சாமானியர்கள், ஏழைகள், விவசாயிகளின் பாதுகாவலன் என்றால் அது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தான். இன்றைக்கு பொதுத்துறை வங்கிகள் பல கிராமங்களுக்கே வந்துவிட்டது. தனியார் வங்கிகளும் கிராமங்களை நோக்கி படை எடுக்க ஆரம்பித்துவிட்டன.

Co-operative loans: Tamilnadu govt Major good news For farmers and small entrepreneurs

ஆனால் இன்று வரை மக்களின் நம்பிக்கையான ஒரே வங்கி என்றால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள். நகர்புறங்களில் மத்திய கூட்டுறவு வங்கிகளும், கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் நகை கடன் உள்பட பல்வேறு கடன்களை குறைந்த வட்டியில் வழங்குகின்றன. விவசாயிகளின் பாதுகாவலான திகழ்கின்றன.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை முக்கியமான முடிவு எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களையும் உயர்த்தி வழங்க முடிவு செய்திருக்கிறது..

அதன்படி, நகைக்கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இனி ரூ.30 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் ஓராண்டுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பில் மாற்றம் இல்லை. சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.. இனி சம்பளக்கடன் ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களை பொறுத்தமட்டில் 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பு 120 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு வணிக கடனாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இனி சிறு வணிக கடன் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றமும் கிடையாது.

ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் கடனுக்கு ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதமும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும். அதேபோல், ஜாமீன் உத்தரவாதம் வழங்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராகவும், பான் கார்டு உள்ளிட்ட இதர ஆவணங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளி பொறுத்தவரை, விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்களை பெறமுடியும்.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம். சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+