திடீரென உயர்ந்த அலைகள்.. ஊருக்குள் வந்த கடல் நீர்.. நிவர் புயலுக்கு இடையே கடலோர மாவட்டங்களில் அச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவர் புயல் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில் தமிழகம் முழுக்க பல்வேறு கடலோர மாவட்டங்கள் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

Recommended Video

    காசிமேட்டில் ராட்சத அலைகள்...! நிவரின் கோரத்தாண்டவம்! - வீடியோ

    தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. நிவர் புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது.

    வங்க கடலுக்கு அருகே தற்போது நிலை கொண்டு இருக்கும் நிவர் புயல் சென்னையில் இருந்து 400 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த புயல் தற்போது 50 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

    வேகம்

    வேகம்

    இந்த நிலையில் நிவர் புயல் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில் தமிழகம் முழுக்க பல்வேறு கடலோர மாவட்டங்கள் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த புயல் வங்ககடலில் வழியாக வந்து தமிழகத்தில் கரையை கடந்து ஆந்திர பிரதேசம் செல்கிறது. ஆந்திராவில் இந்த புயல் வலிமை இழக்கும்.

    எப்படி

    எப்படி

    இந்த புயல் காரணமாக வங்கக்கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் எல்லாம் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் சில இடங்களில் கடல் நீர் உள்ள புகுந்து உள்ளது. விழுப்புரத்தில் கடல் அரிப்பு காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    எங்கே

    எங்கே

    விழுப்புரத்தில் இருக்கும் கடலோர கிராமமான பொம்மையார்பாளையத்தில் கடல் நீர் ஊருக்கு உள்ளே 20 அடி புகுந்ததது. அதேபோல் புயல் கரையை கடக்க உள்ள மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. காலையில் இருந்து கடல் நீர் சில மீட்டர்கள் உயரத்தில் கொத்தளித்தது வருகிறது.

    உள்ளே புகுந்தது

    உள்ளே புகுந்தது

    மாமல்லபுரத்தில் சில பகுதிகளில் 20 மீட்டருக்கு மேல் கடல் நீர் உட்புகுந்ததுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையில் காசிமேட்டில் ராட்சச அலைகள் எழுந்துள்ளது. காசிமேடு மீன் பிடி துறைமுக பகுதிகளில் ராட்சச அலைகள் எழுந்து வருகிறது.

    அச்சம்

    அச்சம்

    இதனால் தமிழகம் முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் 8-9 புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. நாளைதான் புயல் கரையை கடக்கும். அதுவரை கடல் இப்படித்தான் கொந்தளிப்புடன் காணப்படும். நாளை அதிகாலை கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+