சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் பிரபல ஹோட்டல் பிரியாணியில் கரப்பான்பூச்சி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் பிரபல உணவகத்தில் கரப்பான் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ளது புஹாரி ஹோட்டல். இதன் கிளைகள் சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் உள்ள உணவகத்திற்க்கு உணவருந்த வந்த தம்பதி வந்திருந்தனர். அப்போது மெனு கார்டை பார்த்து பிரியாணியை ஆர்டர் செய்தனர்.

பிரியாணி
சுடச்சுட வரும் பிரியாணியை சாப்பிட ஆசையாக காத்திருந்தனர். அப்போது பிரியாணி சாப்பிட்டு முடிக்க போகிற நேரத்தில் ஒரு கைப்பிடி அளவே இருந்த பிரியாணி ஏதோ கருப்பாக இருந்ததை தம்பதி கண்டனர். அது மசாலாவாக இருக்கும் என நினைத்த நிலையில் அது கரப்பான் பூச்சி. இதனால் அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர்.

உணவு பாதுகாப்பு துறை
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி சுகுமார் உணவகத்தில் சோதனை மேற்கொண்டார். அதில் சமையலறை பகுதியில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் இருந்ததை கண்டார். மேலும், அசுத்தமான நிலையில் உணவு சமைக்கப்படுவதையும் சமைக்கும் பகுதியில் கரப்பான் பூச்சி சுற்றித் திரிவதையும் பார்த்துள்ளார்.

ரூ 5000 அபராதம்
பின்னர் புகாரின் அடிப்படையில் 3 நாள் உணவகத்தை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உணவகத்திற்கு மூட உத்தரவிட்டார். ஹோட்டல் மீது எழுந்த புகாரை மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு 5000 ரூபாய் அபாரதத்தை விதித்தார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு
கடந்த ஆண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்தார். ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்திருந்தது பெருங்குடியில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து. நிவேதா பெத்துராஜ் கரப்பான் பூச்சி உணவை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம் தங்களது செயலி லிஸ்ட்டில் இருந்து உணவகத்தை பெயரை நீக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications