Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"Code F.." சென்னை ஏர்போர்ட்டில் மேஜர் மாற்றம்.. களத்தில் டிஆர்பி ராஜா! இது நடந்தால் எல்லாம் மாறிடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சில முக்கியமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சமீபத்தில் விமான நிலையம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா கோட் எஃப் சான்றிதழ் குறித்து கோரிக்கை வைத்தார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை ஏர்போர்ட். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முக்கிய ஏர்போர்ட்டாக சென்னை இருந்தது. ஆனால், இப்போது பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சென்னைக்கு கடும் போட்டி கொடுக்கிறது.

chennai chennai airport trb rajaa

ஆலோசனைக் கூட்டம்: சென்னை ஏர்போட்டில் இப்போது முக்கியமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சென்னை ஏர்போர்ட் அபிவிருத்தி பணிகள் ஆலோசனை செய்யப்பட்டது.. இதில் சென்னை ஏர்போர்ட் ஆணைய உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஏர்போர்ட் வரும் பயணிகள் மற்றும் சரக்குகள் கையாள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்போது சென்னையில் 3 முனையங்கள் உள்ள நிலையில், கூடுதலாக ஒரு முனையத்தைச் சரக்கு போக்குவதிற்கு மட்டும் கையாள பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஏன் முக்கியம்: அது எந்தவொரு ஏர்போர்ட்டிற்கும் சரக்கு சேவை மூலம் அதிக வருவாய் கிடைக்கும். அதிலும் சென்னை ஏர்போர்ட் முக்கியமான மத்திய கிழக்கு நாடுகளையும் தெற்காசிய நாடுகளையும் இணைக்கும் இடத்தில் உள்ளது. இதனால் சரக்கு சேவை மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும். இருப்பினும், இப்போது இட நெருக்கடியால் இந்த சரக்கு சேவை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையத்திற்குச் செல்கிறது. அதை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வரவே சரக்கு சேவைக்குத் தனியாக முனையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது தவிரச் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாகத் தேசிய நெடுஞ்சாலை 32க்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுபோல சாலை அமைத்தால் அது மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவும் என்பதால் இந்தத் திட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கோட் எஃப்: இந்தக் கூட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து டெவலப்மேண்ட் பணிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தியது ஒரு விஷயத்தைத் தான். அதாவது சென்னை விமான நிலையத்திற்கு கோட் எஃப் சர்டிபிக்கேட் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோட் எஃப் என்பது மிகப் பெரிய பயணிகள் விமானங்களைக் கையாள முடியும் என்று ஒரு விமான நிலையத்திற்கு அளிக்கப்படும் சான்றிதழ் ஆகும். அந்த விமானங்களின் இறக்கை அளவு 65 முதல் 80 மீட்டர் வரை இருக்கும் என்பதால் அந்தளவுக்கு விமான நிலையத்தின் ஓடுபாதையும் வந்து நிற்கும் இடங்களும் பெரிதாக இருந்தால் மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்படும். இந்தியாவில் ஹைதராபாத் உள்ளிட்ட ஓரிரு விமான நிலையங்களுக்கு மட்டுமே இந்த சான்றிதழ் உள்ளது.

நம்பிக்கை: சென்னை விமான நிலையத்தை இந்த பெரிய விமானங்களைக் கையாளும் வகையில் மாற்றி அமைத்து, இந்த சான்றிதழைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தினார். இது சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+