கோவை பந்த்: தலைமைக்கே "தெரியாமல்" சிபி ராதாகிருஷ்ணன், வானதி தனி ஆவர்தனம்? அண்ணாமலை ஆக்ஷன் எடுப்பாரா?
சென்னை: பாஜக மாநில தலைமையை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அக்டோபர் 31-ந் தேதி கோவையில் பந்த் அறிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆதரவு தெரிவித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது மாநிலத் தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுப்பாரா? என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்பியுள்ளனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவையில் நாளை மறுநாள் பந்த் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
கோவையில் பாஜக அழைப்பு விடுத்த பந்த்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களைப் பாதிக்கக் கூடிய நூல் விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு பாஜக பந்த் நடத்தியதா? இந்த பந்த் தேவையில்லாதது என விமர்சித்திருந்தார்.

வானதி சீனிவாசன் ஆவேசம்
இதற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பதில் அளித்திருந்தார். வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில், 3,000 காவல் துறையினரை குவிக்க வேண்டிய அளவுக்கு, 40 சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டிய அளவுக்கு, மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமான தால்தான், அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

பந்த் ஜனநாயக போராட்டம்- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தி.மு.க. ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை பரபரப்பு தகவல்
மேலும் கோவை பாஜக பந்த்-க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிபதிர் வெங்கடேஷன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி விசாரித்தனர். இந்த விசாரணையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில், கோவை பந்த் அழைப்பு என்பது மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை. மாநில தலைமை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தன்னிசையாக அறிவித்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த பதிலைத் தொடர்ந்து, கோவையில் நாளை மறுநாள் பந்த் நடைபெற்றால் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணாமலை பதிலால் பாஜகவில் பிரளயம்?
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்து பாஜகவுக்குள் பெரும் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை கோவை கார் சிலிண்டர் வெடிப்பை முக்கிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் முடிவெடுத்து செயல்படுவதையே அண்ணாமலை தரப்பின் விளக்கம் வெளிப்படுத்தி இருக்கிறது. இதனால் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஆர், வானதி மீது நடவடிக்கை பாயுமா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு தெரிவித்தபடி, பாஜக தலைமையின் ஒப்புதல் பெறாமல் சர்ச்சைக்குரிய பந்த் அழைப்புக்கு கோவை மாவட்ட பாஜக நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது. அப்படியானால் பந்த் அழைப்பு விடுத்த சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மீது கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா? என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வி. பாஜகவில் நிலவி வரும் யார் பெரியவர் என்ற கோதாவின் வெளிப்பாடுதான் கோவை பந்த் விவகாரத்தில் ஆளுக்கு ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பது என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications