பயணிகள் எதிர்பார்ப்பு நிறைவேறியது! கோவை - பெங்களூர் வந்தே பாரத்.. புறப்படும் நேரம் மாற்றம்.. ரயில்வே
சென்னை: கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து காலை 5 மணிக்கே புறப்படுவதால் பயண நேரத்தை மாற்றுமாறு தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கோவையில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக காலை 7 மணி 25 நிமிடங்களுக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதி நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - மைசூரு, சென்னை - நெல்லை என முன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலானது தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. பின்னர் பெங்களூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலில் 478 ஏசி சேர் கார்கள் இருக்கைகளாக உள்ளன. இந்த ஏசி சேர் கார் கட்டணம் பெங்களூருக்கு 1025 ரூபாய் ஆக உள்ளது. 52 எக்ஸிகியூட்டிவ் சேர் கார்கள் உள்ளது. இதற்கு கட்டணமாக 1930 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படுவதால் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஏற்கனவே காலை 6 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் செல்லும் நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கினால் அதிகாலை ஐந்து மணிக்கு இயக்கினால் மக்கள் எப்படி பஸ்களை அல்லது ஆட்டோவை பிடித்து எப்படி வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று பயண நேரத்தை மாற்றி அமைக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வண்டி எண் 20642 / 20641 கோவையில் இருந்து பெங்களூரு காண்ட் வரை செல்லும் வந்தே பாரத் ரயில், காலை 5 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக காலை 7 மணி 25 நிமிடங்களுக்கு புறப்படும்.
இந்த ரயில், திருப்பூருக்கு காலை 8.03 மணிக்கு வரும். 8.05 மணிக்கு புறப்பட்டு திருப்பூரில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு 9. 32 மணிக்கும், தர்மபுரிக்கு 10. 51 மணிக்கும் ஓசூருக்கு மதியம் 12. 03 மணிக்கும் பெங்களூர் காண்டிற்கு பிற்பகல் 1 மணி 50 நிமிடங்களில் சென்றடையும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications