நெருங்கும் தீபாவளி.. போனஸ் கேட்டு போராட்டத்தில் குதித்த.. கோவை தூய்மைப் பணியாளர்கள்
கோவை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தினந்தோறும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் மாநகராட்சி ஊழியா்களின் மூலமாக வாகனங்களில் வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்படுகின்றன. நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கும் மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இப்பணியில் நூற்றுக் கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போனஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தூய்மை பணியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் ரூ. 4 ஆயிரம் போனஸ் தருவதாக தெரிவித்த நிலையில் தொழிற்சங்கங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து, மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பலருக்கு 1,800 ரூபாயும், ஒரு சில பணியாளர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் எனவும் வங்கிக் கணக்கில் போனஸ் என அனுப்பப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நிறைவடைவதற்கு முன்பாகவே ஒப்பந்த நிறுவனத்தினரே போனஸ் தொகையை தீர்மானித்து வங்கிக் கணக்கில் செலுத்தியதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் போராட்டம் இன்று நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து கலந்துகொண்டனர். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், தனியார் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்ணயித்த போனஸ் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும் போனஸ் தொகை நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை, இஎஸ்ஐ, கூடுதல் பணிக்கு கூடுதல் சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தூய்மைப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு விடாமல், மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications