சென்னையில் 70 வயது முதியவர்னு கூட பார்க்கல.. கோவை சுசீலா கணவனுடன் செய்த கேவலமான வேலை
சென்னை: இன்னும் மக்களை முட்டாளாக்கி, அவர்களின் பயத்தை மூலதனமாக்கி சம்பாதிக்கும் கூட்டம் இருக்கிறது. சிலரின் வறுமையை பயன்படுத்தி வங்கி கணக்கை வாங்கி பணம் சம்பாதிக்கும் கூட்டமும் இருக்கிறது. அப்படித்தான் சென்னை அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த வைரவன் என்பவரை ஏமாற்றி 60 லட்சம் சம்பாதித்துள்ளனர் ஒரு கோவை தம்பதி. மும்பை போலீஸ் போல் நடித்து டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி முதியவரிடம பணம் பறித்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில் 72 வயதாகும் வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மொபைலுக்கு அண்மையில் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தங்களை 'மும்பை சைபர் கிரைம் போலீஸ்' என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், அவரை மிரட்டி உள்ளனர்.

வங்கி கணக்கில் பணம்
"நாங்கள் மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுகிறோம்.. உங்கள் வங்கி கணக்கில் மோசடி நடைபெற்று இருக்கிறது. அந்த பணத்தை சோதிக்க வேண்டும்.நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும். விசாரணைக்கு பிறகு உங்கள் பணம், வங்கி கணக்கிற்கே திரும்ப வந்துவிடும். அப்படி நீங்கள் பணத்தை செலுத்தாமல் இருந்தால், உங்களை டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
வழக்கு பதிவு
இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிர் வைரவன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 46 வயதாகும் செந்தில்குமார், மற்றும் அவரது மனைவியான நர்ஸ் சுசீலா (40) ஆகியார் செய்த மோசடி என்பதும் தெரியவந்தது.
ஆசை வார்த்தை
நர்ஸ் சுசீலா மற்றும் செந்தில்குமார் தம்பதி, கல்லூரி மாணவர்களையும், கல்வியறிவு இல்லாதவர்களையும் மூளைச்சலவை செய்து, அவர்களின் வங்கி கணக்கை பணத்தேவைக்காக பயன்படுத்தி கமிஷன் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களது வங்கி கணக்குகளை பெற்று மோசடி நபர்களிடம் கமிஷன் தொகையை வழங்கி உள்ளார்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆவடி சைபர் கிரைம் போலீசார் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 6 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 7 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிஜிட்டல் கைது விழிப்புணர்வு
நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்திய சட்டப்படி 'டிஜிட்டல் கைது' என்ற ஒன்றே கிடையாது. எந்தவொரு காவல்துறை அதிகாரியோ, சிபிஐ அதிகாரியோ அல்லது அமலாக்கத்துறையினரோ உங்களை வாட்ஸ்-அப் வீடியோ காலி விசாரணை நடத்த மாட்டார்கள்.
உங்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறி வீடியோ காலில் சிறை வைக்க எந்த அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை. காவல்துறை எப்போதுமே நேரில் வந்துதான் சம்மன் கொடுப்பார்கள் அல்லது விசாரணைக்கு அழைப்பார்கள்.
அதேபோல் உங்கள் பெயரில் வந்த பார்சலில் போதைப்பொருள்/ஆபாச வீடியோக்கள் உள்ளன, உங்கள் வங்கி கணக்கில் மோசடி நடந்துள்ளது. உங்கள் ஆதார் கார்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தினர் ஆபத்தில் உள்ளனர் என பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் அது மோசடி என்று முடிவு செய்து அழைப்பை துண்டியுங்கள்.












Click it and Unblock the Notifications