கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் சந்தேகம் வருது.. சிபிஐ விசாரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: கோவை சரக டிஐஜி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவையில் உள்ள வீட்டில் டிஐஜி விஜயகுமார் தமது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. காலையில் டிஐஜி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஐஜி தற்கொலை செய்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினை காரணம் இல்லை என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். இது தொடர்பாக டிஜிபி கூறும் போது, கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். விஜயகுமாருக்கு ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார். டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு அலுவலக பிரச்சினையோ பணிச்சுமையோ காரணம் கிடையாது. ஐஜி சுதாகார் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்" என்று கூறினார்.
இந்த நிலையில், கோவை சரக டிஐஜி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications