"கோவையை காப்பாற்றுங்க" அன்று பதறிய வானதி.. ஆக்ஷன் எடுத்த ஸ்டாலின்.. நிம்மதியில் அரசு ஆஸ்பத்திரி
தொற்று நோயாளிகள் இல்லாத, கோவை அரசு மருத்துவமனையாக திகழ்கிறது
சென்னை: கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாருமே சிகிச்சை பெறவில்லை என்ற நிம்மதி தகவல் வந்துள்ளது.
கடந்த வருடங்களில் பல மாதமாக சென்னையை விட மிரட்டி கொண்டிருந்தது கோவை மாவட்டம்தான்.. தொற்று மிக அதிகமாகிவிட்டது..
ஒருகட்டத்தில் கோவையை காப்பாற்றுங்க என்று வானதி சீனிவாசன் டெல்லி வரை பிரச்சனையை கொண்டு போனார்.

ஆம்புலன்ஸ்
அதிலும், ஏப்ரல், மே மாதங்களில் ஆம்புலன்ஸ் நிற்க கூட இடம் இல்லாத வகையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்... இந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 47 பேர் வரை உயிரிழந்தனர்... கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள், நர்சுகள், எந்த நேரமும் பரபரப்புடனே காணப்பட்டனர்... நோயாளிகள் கண்ணீருடனேயே நடமாடினர்.. மருத்துவமனை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
ஆனால், முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கோவைக்கு பயணம் செய்து தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. கொரோனா வார்டுக்குள் நுழைந்து, நோயாளிகளின் பயத்தையும் நீக்கினார்.. அடுத்தடுத்த லாக்டவுன் போட்டுவிடவும், அது மேலும் இந்த மாவட்டத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க உதவியது. இதனிடையே, தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர்... சுகாதார அதிகாரிகளும் சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வருகிறார்கள்.. இப்போது கொரோனாவை காணோம்..!

டிஸ்சார்ஜ்
கடந்த சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை 1, 2 எண்ணிக்கையிலேயே பதிவாகி வருவது நிம்மதியை தந்து வருகிறது.. இது தவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் கடந்த ஒரு வாரமாக 10க்கும் கீழ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கொரோனா நோயாளிகள் கூட சிகிச்சையில் இல்லை.. எல்லாருமே குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்..

தொற்று
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா சொல்லும்போது, "கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு எற்படுத்தப்பட்டது... இந்த வார்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. சிகிச்சையில் இருந்த நோயாளிகளும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நோயாளிகள்
இப்போது வார்டில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வார்டை மாற்றம் செய்யாமல் உள்ளோம்... தினமும் 50க்கும் அதிகமான நபர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது" என்றார்... 2 வருடங்கள் கழித்து, கோவை மாவட்டத்தில் நிம்மதி பெருமூச்சு கேட்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications