கோயம்புத்தூர் விமான நிலையம்...நிலம் கையகப்படுத்தலாம்... நீதிமன்றம் தீர்ப்பு !!
சென்னை: கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கியது.
விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை காளபட்டியைச் சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் முறையான கருத்து கேட்கவில்லை, தங்களது எதிர்ப்புகளை பரிசீலிக்கவில்லை, தங்களுடைய நிலத்திற்கு செல்ல பாதை கிடைக்காது என தெரிவித்து இருந்தனர்.

எனவே விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நிலம் கையகப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிலம் கையகப்படுத்த தடை விதித்திருந்தது.
இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கி விட்டதாக குறிப்பிட்டார் . வழக்கு நிலுவையில் உள்ளபோதே இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
எனவே நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி திட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தடையை நீக்கி நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு தரவேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளனர். பாதை தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications