கோவை மக்களை இரவு முழுக்க பதற வைத்த வைத்த ஆசாமி.. போலீஸ் கையில் சிக்கியது எப்படி?
சென்னை: கோவை மாநகரில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறி வைத்தும், வீடுகளின் பின்புறம் நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்தி வந்த ஆசாமி ஒருவரை, கவுண்டம்பாளையம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளனர்.. ஏற்கனவே இதே நபரை பற்றி போலீசில் புகார் சொல்லப்பட்டதாம்.. இப்போது மீண்டும் அதே நபர் சிக்கி உள்ளார்.. என்ன நடந்தது கோவையில்?
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர், நேற்று காலை 8.15 மணியளவில் தனது வீட்டில் வழக்கம் போல் வேலைகளைக் கவனித்துக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.

கோயம்புத்தூர் பெண்கள்
அப்போது வீட்டின் பின்புறப் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்பதைக் கேட்டு, சந்தேகம் அடைந்து பின்புறம் எட்டிப் பார்த்து உள்ளார்.. அங்கு கோவில்மேடு, சாந்தி வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் முருகன் (38) என்ற ஆசாமி ஆடையின்றி பிறந்த மேனியாக நின்று கொண்டிருந்தாராம்.. அத்துடன், ரம்யாவை பார்த்து மிகக் கொடூரமான முறையில் ஆபாச சைகைகள் செய்துள்ளார்.. இதை பார்த்து ரம்யா கடுமையான அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்..
உடனே அலறி கூச்சலிடவே, ரம்யாவின் கணவர் பதறி அடித்து ஓடிவந்துள்ளார்.. அவர் ஓடி வருவதைப் பார்த்த அந்த ஆசாமி அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடி உள்ளார்..
ஆபாச செய்கை செய்த ஆசாமி
இதையடுத்து அக்கம், பக்கத்தில் விசாரித்தபோதுதான், அந்தப் பகுதி மக்களிடமிருந்து பல உண்மைகள் வெளிவர துவங்கின.. அதாவது இந்த ஆசாமி இதேபோல் பல வீடுகளின் முன்பாக இப்படித்தான் நிர்வாணமாக நிற்பாராம்.. அதுவும் காலி இடங்களிலும் நின்று கொண்டு. அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களைக் குறி வைத்து ஆபாச சைகைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்..
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்றும் இப்படிதான் அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளார்.. இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (100) அவசரத் தகவல் தெரிவித்துள்ளனர்.. சற்று நேரத்தில் விரைந்து வந்த போலீஸார், இந்த ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.. அப்போதுதான், இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீசாருக்கே தெரியவந்தது.. அதனால், அந்நபரை எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அலறிய பெண்கள்
எனினும் தன்னுடைய புத்தியை மாற்றிக் கொள்ளாத இந்த ஆசாமி, நேற்று மீண்டும் அதே பகுதியில் சுற்றித் திரிந்து பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், கடுப்பான பொதுமக்கள் மீண்டும் போலீசில் புகார் தந்துள்ளனர்.. அந்த புகாரின் அடிப்படையில் கவுண்டம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசாமியை காவல் நிலையம் அழைத்து வந்தனர்..
இதனைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் முருகன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 (4 of TNPHW Act) ஆகியவற்றின் கீழ் குற்ற எண் 212/2026-படி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.. விசாரணைக்குப் பிறகு, ஆசாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெண்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது..!!!












Click it and Unblock the Notifications