Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய கல்லூரி மாணவர்.. திடீரென சுருண்டு விழுந்து பலி.. கோயம்பேட்டில் சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு நூறு அடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது பெண் தோழியின் சகோதரி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்ஜினியரிங் கல்லூரி மாணவர் நடனம் ஆடிக்கொண்டு இருந்த போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்தவர் சத்யசாய் ரெட்டி. 21 வயதான சத்யசாய் ரெட்டி பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு என்ஜினியரிங் படித்து வந்தார்.

இவரது கேர்ள் ஃபிரண்டின் சகோதரிக்கு திருமணம் இன்று நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

சென்னை கோயம்பேடு நூறடி சலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வருகை தந்து இருந்தனர். சத்யசாய் ரெட்டியும் தனது நண்பர்களுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வரவேற்பு மேடைக்கு அருகில் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.

திடீரென சுருண்டு விழுந்தார்

திடீரென சுருண்டு விழுந்தார்

விருந்தினர்களை கவர இசைக்கச்சேரியில் விதவிதமான பாடல்கள் பாடப்பட்டன. அப்போது, என்ஜினியரிங் மாணவர் சத்யசாயும் இசைக்கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களுக்கு ஏற்பட நடனம் ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் தரையில் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு காதில் இருந்து ரத்தமும் வந்தது. இதைக் கண்ட சத்யசாயின் நண்பர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள்

இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள்

இதன் பின்னர் சத்யசாய் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யசாய் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டதும் சத்யசாயின் நண்பர்கள் கதறி அழுதனர். சில நிமிடங்களுக்கு முன்பு வரை தங்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டு கொண்டு இருந்த நண்பன் தங்களை விட்டு விட்டு போயிவிட்டானே என கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளம் ஆக்கியது.

மகனின் உடலை பார்த்து..

மகனின் உடலை பார்த்து..

நல்ல உடல் நலத்துடன் இருந்த கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்தது திருமண வீட்டினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சத்யசாய் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த சத்யசாயின் பெற்றோர் ஆந்திராவில் இருப்பதால் அவர்களுக்கு மகன் உயிரிழந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டதும் பதறியடித்து வந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இளம் வயதினருக்கு மாரடைப்பு

இளம் வயதினருக்கு மாரடைப்பு

சத்யசாய் திடீரென உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிக்கொண்டு இருந்த போது கல்லூரி மாணவர் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

போதிய உடல் உழைப்பு இல்லாதது

போதிய உடல் உழைப்பு இல்லாதது

இதற்கு தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம் உள்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் போன்றவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. உலக அளவில் இதயநோய் பதிப்புக்கு அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+