மண்ணில் பிரிந்த காதலன்.. விண்ணில் சந்திக்க சென்ற காதலி.. கதறிய தந்தை.. சென்னையில் பெரும் சோகம்
சென்னை வியாசர்பாடியில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45).இவர் அந்த பகுதியில்ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கும், மகனுக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் தனிக்குடித்தனம் சென்று வசித்து வருகின்றனர்.
சுரேஷின் கடைசி மகள் பெயர் மைத்தீஸ்வரி (வயது 18). இவர் ஒரு அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். தந்தை சுரேஷ் நேற்று முன்தினம் ஆட்டோ சவாரிக்கு சென்றிருக்கிறார். வீட்டில் இருந்த சுரேஷின் மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டார்.

போனில் அழைத்த தந்தை
மகள் மைத்தீஸ்வரி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனிடையே மைத்தீஸ்வரி கல்லூரிக்கு சென்று விட்டாரா? என்று தெரிந்து கொள்ள அவரை செல்போனில் அழைத்திருக்கிறார் சுரேஷ். அப்போது மைத்தீஸ்வரி போனை எடுக்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு சென்று மைத்தீஸ்வரியை பார்த்துள்ளனர்.

அதிர்ச்சி
அங்கு கதவு பூட்டப்பட்டு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அவர்கள் கதவை வெகுநேரம் தட்டி இருக்கிறார்கள். ஆனால் மைத்தீஸ்வரி திறக்காததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்கள். அதில், வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் மைத்தீஸ்வரி தூக்கிட்ட நிலையில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் மீட்பு
உடனே அவர்கள் சுரேசுக்கு போன் செய்து நடந்ததை கூறி உள்ளனர். இதையறிந்த சுரேஷ் வீட்டிற்கு விரைந்து வந்து மகள் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் வசித்து வந்த பிரவீன் என்ற வாலிபரும், மைத்தீஸ்வரியும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்களாம். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் கடந்த மாதம் பிரவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

வியாசர்பாடியில் சோகம்
இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தீஸ்வரி உடனே தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோர் உயிரை காப்பாற்றியதும் தெரியவந்தது. இருப்பினும், காதலன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்து வந்த மைத்தீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வியாசர்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் அரசின் உதவி எண் ஆன 104ஐ தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். அதேபோல் iCALL (Hours: Mon-Sat, 10 AM-8 PM. Languages: English, Hindi, Marathi, Gujarati, Bengali, Tamil)க்கு 9152987821 என்ற எண்ணில் அழைத்து நிவாரணம் பெறலாம்.












Click it and Unblock the Notifications