இடிமின்னலின் ஜன்னல்கள் திறந்தாச்சு.. இன்று நாளையும் சென்னையில் வெளுக்கும் மழை.. முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் மழை நிலவரம் குறித்து சென்னையில் ஒரு மழைக்காலம் எனும் பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையிலும் கேரளா, கர்நாடகா, கோவா தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் ஆலப்புழா, கண்ணனூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

COMK facebook page says about Chennai rains for today and tomorrow

வடமாநிலங்களிலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்கி சாலையை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் பாலங்கள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ந்துள்ளனர். குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் எழுந்துள்ளது.

தமிழகத்திலும் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநர் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மாலை வேளையில் மஞ்சள் நிறத்தில் வானம் காட்சியளித்து கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சில நிமிடங்களில் கார் மேகம் சூழ்ந்து கொண்டு மழையை தருகிறது.

இத்தனை நாட்களாக வெயிலில் தவித்து வந்த சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலானோர் இந்த மழையை எண்ணி மகிழ்கிறார்கள். இந்த நிலையில் மழை குறித்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: இடி மின்னலுடன் கூடிய ஜன்னல்கள் திறக்கப்பட்டுவிட்டது.

இதனால் இன்றும் நாளையும் சென்னைக்கு நல்ல மழையை கொடுக்கும். அது போல் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யும். காற்றின் நிலையற்றத்தன்மை வடதமிழகத்திற்கும் அதை ஒட்டியுள்ள தென் ஆந்திரத்திற்கும் சாதகமான இருந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் பொழுது விடியும். பின்னர் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும்.

COMK facebook page says about Chennai rains for today and tomorrow

அது போல் மற்றொரு பதிவில் தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. திருச்சி மாவட்டம், டெல்டா பகுதிகளில் மழை தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடி மாதத்திலும் நல்ல காற்றுடன் மழை பெய்யும் என பெரியவர்கள் கூறுவார்கள். பின்னர் செப்டம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+