டெங்குவால் உயிரிழந்த சிறுவன்.. வீட்டுக்கு திடீரென சென்ற ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. வாசலிலேயே இப்படியா?
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவர்களிடம் டெங்கு கொசு எப்படி உருவாகிறது என்பது குறித்தும், நல்ல தண்ணீரை சேமிக்கும் டிரம்களை எப்படி மூடி வைக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
சென்னை மதுரவாயல், பிள்ளையார்கோயில் தெருவில் வசித்து வருமை அய்யனார் சோனியா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரக்ஷனுக்கு 4 வயது ஆகிறது

இந்நிலையில், சிறுவன் ரக்ஷனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசானா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது.இதையடுத்து சிறுவன் ரக்ஷனை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்ஷன்நேற்று முன்தினம் இரவு ரக்ஷன் உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து, சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, மதுரவாயல் பகுதி மக்கள் கடும் கோபம் அடைந்த போராட்டம் நடத்தினர்.
during this visit. GCC is taking all measures for the source reduction in the locality. GCC has increased the IEC campaigns against vector-borne diseases across #Chennai, and urges #Chennaiites to beware and keep the surroundings clean for getting protected against (2/3) pic.twitter.com/p3kWHOHRrA
— Greater Chennai Corporation (@chennaicorp) September 11, 2023
சுகாதார சீர்கேட்டினால் தான் குழந்தை ரக்ஷன் இறந்து போனான் என்று குற்றம்சாட்டினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், டெங்கு காய்ச்சலால் இறந்து போன சிறுவன் ரக்ஷனின் வீட்டிற்கு திடீரென நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சிறுவனின் வீட்டின் முன்பு இருந்த நல்ல தண்ணீர் டிரம்களை ஆய்வு செய்தவர் இப்படி திறந்து போட்டால் நிச்சயம் கொசுக்கள் உற்பத்தியாகும் என்றார். டெங்கு கொசு பகலில் தான் கடிக்கும் என்று கூறியவர். நல்ல தண்ணீரில் தான்இந்த கொசு உற்பத்தியாகும் என்றும். எனவே தண்ணீர் டிரம்களை திறந்த நிலையில் துணி போட்டு அதன் மீது மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
vector-borne diseases. (3/3) #ChennaiCorporation | #NalamiguChennai | #HereToServe pic.twitter.com/23UdejWG79
— Greater Chennai Corporation (@chennaicorp) September 11, 2023
அப்போது அந்த பகுதி மக்கள், கால்வாய்களை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்,நான் நிச்சயம் கால்வாய்களை சரி செய்ய சொல்கிறேன் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.
தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகளிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களிடமும் கொசுக்கள் தேங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கிறார். அப்போது மக்கள் அவரிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் கூறினர். அதனையும் சரி செய்வதாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களிடம் உறுதி அளித்தார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications