பெரும் நிதிச் சுமைகளை தரும் வழக்குகள்! அரசுக்கு உதவ வழிகாட்டும் குழு! முதல் ஆய்வுக் கூட்டம்!
சென்னை: பெரும் நிதிச் சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகள் குறித்து அரசுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நீதிமன்ற வழக்குகளால் அரசிற்கு ஏற்படும் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கான உத்திகள் குறித்து அந்தக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலும் சில விவரம் வருமாறு;

மேற்பார்வை குழு
2021-2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசுக்கு அதிக நிதிச் சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகள் குறித்து வழிகாட்டுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழுவை அரசு அமைத்துள்ளது.

குழுவில் யார் யார்?
பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும் மற்றும் இரயில்வே கோரிக்கைகள் தீர்ப்பாய முன்னாள் தலைவருவான நீதிபதி கே.கண்ணன்(ஓய்வு), மறைமுக வரிவிதிப்பு வல்லுநரும், வழக்குரைஞருமான ஜோசப் பிரபாகர், நேரடி வரி விதிப்பு வல்லுநர் வழக்குரைஞர் கே.ரவி, உரிமையியல் வழக்கு வல்லுநர் வி.லஷ்மிநாராயணன், நிதித் துறை, சட்டத்துறை மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,

என்னென்ன பணிகள்?
மேற்சொன்ன குழுவின் ஏனைய பணிகளுடன், நீதிமன்ற வழக்குகளால் அரசிற்கு ஏற்படும் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கான உத்திகளைத் தெரிவித்தல், நீதிமன்ற அமைப்புகளில் பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு அணுகுமுறைகள் மற்றும் வாதங்களைக் கருத்தில் கொண்டு ஆலோசனை வழங்குதல், குறிப்பிட்ட வழக்கில் வெற்றி வாய்ப்புகளை மதிப்பீடு செய்து இணக்கமாக செல்லுதல் அல்லது வழக்கின் நிலைகளை மாற்றியமைத்தல் முதலியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்த பணிகள் அடங்கும்.

அரசுக்கு ஆலோசனை
மேலும், அரசுக்கு ஆலோசனை வழங்குதல், அதிக நிதிச்சுமையை உருவாக்கக்கூடிய வழக்குகளில் நிதிச்சுமைகளைக் குறைக்கும் பொருட்டு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தாமதத்திற்கான அபராத வட்டி போன்ற மிகை செலவுகளைத் தவிர்க்கும் வகையில் நீதிமன்ற ஆணைகளின் நிறைவேற்றத்தைக் கண்காணித்தல் ஆகிய பணிகளும் அடங்கும்.

அமைச்சர் பிடிஆர்
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தொடக்கக் குறிப்பில் தற்போதைய சூழ்நிலையில் அதிக நிதிச்சுமையை உருவாக்கக்கூடிய வழக்குகள் அனைத்தையும் கூர்ந்து கண்காணிக்கும் பொருட்டு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வலுவான தரவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications