பட்டியலின மக்களுக்கு எதிராக வேலி! கள ஆய்வில் இறங்கிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள்! பின்னணி என்ன?
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தீண்டாமை வேலி அமைக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் அங்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.
Recommended Video
அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் முள் வேலி அமைப்பதற்காக கம்பம் நட்டிருப்பதை நேரில் பார்வையிட்டு புகாரை உறுதி செய்தனர்.
ஏப்ரல் 6-ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், அப்போது இந்த விவகாரத்தை அவர்கள் சட்டப்பேரவையின் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள் எனத் தெரிகிறது.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோக்கமூர் கிராமத்தில் பட்டியிலன மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறிக்கும் வகையில், அரசு புறம்போக்கு நிலத்தை கோயில் நிலம் எனக் கூறி குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் முள் வேலி அமைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்கு புகார் கிடைத்திருக்கிறது. இதையடுத்து கந்தவர்ககோட்டட் எம்.எல்.ஏ. சின்னதுரை மற்று நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் தேக்கமூர் கிராமத்திற்கே சென்று கள ஆய்வு நடத்தியதோடு பட்டியலின மக்களையும் நேரில் சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

நேரில் ஆய்வு
அதில் பல ஆண்டுகளாக பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்த அரசு புறம்போக்கு நிலத்தை கோயிலுக்கு சொந்தமான நிலம் எனக் கூறி வேலி அமைக்கும் முயற்சிகள் நடந்து வருவதை எம்.எல்.ஏ.க்கள் இருவரும் உறுதி செய்தனர். வேலி அமைப்பதற்கான கம்பங்கள் நடப்பட்டுள்ளதை பார்த்தனர். இதையடுத்து இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அங்கு உறுதியளித்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும் திரும்பியிருக்கிறார்கள்.

சட்டப்பூர்வ நடவடிக்கை
முன்னதாக அங்கு பேட்டியளித்த நாகை மாலி எம்.எல்.ஏ., தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கோயில் நிலம் எனக் கூறி கம்பி வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பட்டியலின மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பணத்தை பெற்றுக்கொண்டு இடம் வழங்க மறுக்கும் தனி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய் மற்றும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தார்.

சமீப நாட்களாக
தமிழகத்தில் இது போன்ற தீண்டாமை வேலிகள் தொடர்பாக பிரச்சனைகள் சமீப மாதங்களாக எழாமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலை தூக்கியுள்ளன. இதனால் இந்தப் பிரச்சனையை ஏப்ரல் 6-ம் தேதி கூடும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications