சர்வ சாதாரணமா போச்சே.. கூட்டணி நிர்வாகிக்கே இப்படி ஒரு நிலைமையா.. லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய சீமான்
நடேச தமிழார்வன் படுகொலைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: திமுகவின் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியை பகல் பொழுதில் சாலையில் வைத்து சர்வ சாதாரணமாகப் படுகொலை செய்ய முடிகிறதென்றால், எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாப்பின் நிலையென்ன? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் நடேச.தமிழார்வன்.. 50 வயதாகிறது.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்த நடேச.தமிழார்வன், நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடியவர்..

வழக்குகள்
இவர் மீது அரசியல் வழக்குகள் தவிர பல்வேறு அடிதடி வழக்குகளும் இருக்கின்றன.. 10 வருடங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸாரிடம் இருந்து தப்பியோடியதால், அதுதொடர்பான வழக்கையும் எதிர்கொண்டவர் ஆவார்... இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்தகும்பல் ஒன்று, நடேச.தமிழார்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச் சென்றது.

மறியல்
இதில், அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த நடேச.தமிழார்வனின் ஆதரவாளர்கள், கொலை சம்பவத்தை கண்டித்து, நீடாமங்கலம் கடைவீதியில் உள்ள கடைகள், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியும் முடியவில்லை.. தமிழார்வனின் உடலை போலீஸாரிடம் ஒப்படைக்க மறுத்து, அவரது உடலின் முன்பு அமர்ந்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடினார்.

சீமான்
இந்த படுகொலைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையும் விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

கொலை
அரசியல் கட்சியின் முதன்மை நிர்வாகியைப் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

படுகொலைகள்
தேனி உத்தமபாளையத்தில் வயதான தம்பதிகள் கழுத்து அறுத்து கொலை, கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை, மதுரையில் உணவக உரிமையாளர் கொலை, மயிலாடுதுறையில் கோயில் காவலாளி கொலை, திண்டுக்கலில் 4 வயது சிறுவன் கொலை, வாணியம்பாடியில் மஜக பொறுப்பாளர் கொலை, சென்னையில் விசிகவை சேர்ந்தவர் கொலை, கன்னியாகுமரியில் ஆதித்தமிழர் ஆணவப் படுகொலை என மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் படுகொலைகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது.

திமுக
ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியைப் பகல் பொழுதில் சாலையில் வைத்து சர்வ சாதாரணமாகப் படுகொலை செய்ய முடிகிறதென்றால், எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாப்பின் நிலையென்ன என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கோரிக்கை
ஆகவே, காவல்துறையைத் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இனியும் இதுபோன்ற படுகொலைகள் தொடராவண்ணம் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, கடும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், இப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications