பளபளக்க போகும் சென்னை சாலைகள்.. மாநகராட்சி எடுத்த பலே பிளான்.. வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 2000- க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி வரை சாலையை சீரமைக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் போக்குவரத்து சாலைகள் பேருந்து தட சாலைகள், உட்புற சாலைகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் இதற்கான பணிகள் நடைபெறும். ஜனவரி மாதத்தில் டெண்டர் விடப்பட்டு பிப்ரவரியில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்பது தான் வழக்கமாக இருக்கும்.

இந்த நிலையில் மழைக்காலம் வருவதற்கு முன்பு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 2000- க்கும் மேற்பட்ட சாலைகள் போடுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 1502 பேருந்து தட சாலைகளும், 1039 உட்புற சாலைகள் என மொத்தம் 3297 சாலைகள் போடப்படுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த 2023 -2024 ஆம் ஆண்டில் 5205 சாலைகள் சீரமைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கிட்டத்தட்ட ரூ. 708 கோடியில் மதிப்பிலான சாலை மதிப்பீட்டில் ரூ. 543 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மட்டுமே சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள ரூ. 165 கோடி மதிப்பிலான திட்டத்திற்கான சாலை பணிகள் நடைபெறாமல் இருந்தது. அந்த பணிகளோடு சேர்த்து தான், இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட 2000 சாலைகள் என மொத்தம் 3297 சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறியதாவது:- சென்னை மாநகராட்சியில் வழக்கமாக ஜனவரி மாதத்தில் டெண்டர் விடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் தான் இதனை முன்பே அறிவிக்கவில்லை. சென்னையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்க ஒப்பதம் கோரப்படுகிறது.
அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் சாலைகளை சீரமைக்க கோரும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யலாம். செப்டம்பர், அக்டோபர் மாத இறுதிக்குள் சாலை பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 112 பேருந்து தட சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் 106 பேருந்து தட சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications