கொரோனாவால் மரணித்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு..பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர்
கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா நோய் தாக்கி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரனோ இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 30,000 அளிக்கப்படும் என்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு 15,000 தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 20, 000 தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications