"என் இனத்தை தொட்டால் தூக்குதான்" வருத்தம் தெரிவித்த துரைமுருகன்.. மன்னிப்பு கேட்டு விரட்டும் காங்.!

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது மீண்டும் காங்கிரஸ் கட்சி புகார் தந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பிரபாகரனின் பிள்ளைகள்-ன்னு நாங்கதான்டா சொல்லுவோம்.. நீ எப்பேர்பட்ட கொம்பனாவது இரு.. எந்த நாட்டின் அதிபனாவது இரு.. என் இனத்தை தொட்டால் அவர்களுக்குத் தூக்குதான்'" என்று ராஜீவ் காந்தியின் கல்வெட்டை கை நீட்டி காட்டி டிக்டாக் பேசிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்று தமிழக காங்கரிரஸ் தரப்பு உறுதியாக கூறியுள்ளதுடன் இது சம்பந்தமான புகாரும்டிஜிபி வரை சென்றுள்ளது.

Recommended Video

    Naam Tamilar Duraimurugan's Tik Tok video | ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சையான டிக் டாக் வீடியோ

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் மரணத்தை நியாயப்படுத்தி பேசியிருந்தார்.

    "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்றார்.

    சீமான்

    சீமான்

    இந்த பேச்சு சர்ச்சையாக வெடித்தது.. காங்கிரஸ் கட்சியினர் இதை கண்டிக்கவும் கண்டித்தனர்.போலீஸ் ஸ்டேஷனில் சீமான் மீது புகாரும் அளித்தனர்... அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.. ஆனால் சீமான் கைது செய்யப்படவில்லை.. அது மட்டுமில்லாமல், தன்னுடைய கருத்திலிருந்து பின் வாங்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    ராஜீவ் காந்தி

    ராஜீவ் காந்தி

    சீமான் அன்று பேசிய பேச்சைதான் நேற்று முன்தினம் அவரது தம்பிகளில் ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார்... அப்போது ராஜீவ்காந்தி நினைவு தூண் முன்பு நின்று சீமானின் விக்கிரவாண்டி பேச்சை பேசி காட்டி வீடியோ செய்திருந்தார்.

    பிரபாகரன்

    பிரபாகரன்

    சீமானை போலவே முகபாவனைகள், கையசைவுகளை காட்டி வீராவேசமாக பேசுவது போல நடித்தார். "பிரபாகரனின் பிள்ளைகள்-ன்னு நாங்கதான்டா சொல்லுவோம்.. நாங்கதான் சொல்லுவோம்.. எங்க இனத்திற்கு ஒரு பெருமை இருக்கு.. நீ எப்பேர்பட்ட கொம்பனாவது இரு.. எந்த நாட்டின் அதிபனாவது இரு.. என் இனத்தை தொட்டால் அவர்களுக்குத் தூக்குதான்'" என்று பேசியபடியே பின்புறமுள்ள ராஜீவ் காந்தியின் கல்வெட்டை கை நீட்டி சுட்டி காட்டுகிறார்.

    புகார்

    புகார்

    இந்த வீடியோவை சோஷியில் மீடியாவிலும் பதிவிட அது சர்ச்சையானது.. அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் ஸ்டேஷனில் சம்பந்தப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென புகார் மனு அளித்தனர்..

    வீடியோ

    வீடியோ

    இந்த சூழலில்தான் துரைமுருகன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து இன்னொரு டிக்டாக் பதிவை வெளியிட்டார். அதில், "நான் ஸ்ரீபெரும்புதூர் போயிருந்தபோது ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் ஒரு டிக்டாக் வீடியோ பண்ணியிருந்தேன். அந்த வீடியோ பதிவிட்டு சரியாக ஒரு மணி நேரத்தில் அது தவறு, அதைப் பண்ணக் கூடாதுன்னு டெலிட் பண்ணிட்டேன். ஆனால், அதுக்கு முன்னாடியே அதை நிறைய பேர் டவுன்லோட் செய்து சோஷியல் மீடியாவில் பரப்பிட்டாங்க.

    எதுவும் நடக்காது

    எதுவும் நடக்காது

    அதைப் பார்த்துவிட்டு ராஜீவ் காந்தியை நேசிக்கிறவங்க என்னை கூப்பிட்டு "நீங்களே இப்படிப் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலை"ன்னு சொன்னாங்க. ஆனால், உண்மையிலேயே ராஜீவ் காந்தி அவர்களையோ, அவர்களுடைய நினைவிடத்தையோ கொச்சைப்படுத்துவதோ அசிங்கப்படுத்துவதோ என்னுடைய நோக்கம் கிடையாது. ஒரு விளையாட்டுத்தனமா செய்துட்டேன்.. அதான் உடனே டெலிட் பண்ணிட்டேன்.. அந்த வீடியோவால் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலோ காயப்பட்டிருந்தாலோ வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் இப்படி எதுவும் நடக்காது" என்றார்.

    நாவடக்கம்

    நாவடக்கம்

    ஆனால் இதனை காங்கிரஸ் தரப்பில் ஏற்று கொள்ளவில்லை.. இப்படி ராஜீவ் காந்தியை பற்றி அவதூறாக இக்கட்சியினர் பேசுவது இது முதல்முறை இல்லை.. நாங்க பின் வாங்க மாட்டோம்.. அப்படி பின்வாங்கிவிட்டால், தொடர்ந்து வாய்க்கு வந்ததை பேசுவார்கள்... போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்ததும் பின்வாங்கும் கோழைத்தனம் மிகுந்த நாம் தமிழர் கட்சியினர் இனியாவது நாவடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

    டிஜிபி திரிபாதி

    டிஜிபி திரிபாதி

    நாட்டுக்குத் தியாகம் செய்த தலைவர்களை பற்றிப் பேசுவதற்கு முன்பு பலலமுறை யோசித்துவிட்டு அதன் பிறகு பேச வேண்டும்.. கட்சி தலைவர்தான் அவரது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இதனை கற்றுக் கொடுக்க வேண்டும்" என்று கொந்தளித்து பேசுகிறார்கள். இந்த விவகாரம் இப்போது டிஜிபி திரிபாதியிடம் புகார் தரும் வரை போயுள்ளது.. இந்த புகாரை படித்து பார்த்த டிஜிபி திரிபாதியும் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்துள்ளதாக தெரிகிறது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+