மகளிர் உரிமைத் தொகை திட்டம்! ரூ 5000 அனுப்பிய தமிழக அரசுக்கு சிக்கல்? டெல்லி பறந்த புகார்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகைக்கு, மத்திய அரசு வழங்கிய எஸ்சி/எஸ்டி சிறப்பு திட்ட நிதியை பயன்படுத்தியதாக தலித் விடுதலை இயக்கம், தேசிய பட்டியலினத்தவருக்கான ஆணையத்தில் புகார் அளித்துள்ளதால் தமிழக அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியை பயன்படுத்தியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு 1.31 கோடி பேருக்கு தலா ரூ 5000 மகளிர் உரிமைத் தொகை வழங்க நிதியானது, மத்திய அரசு வழங்கிய எஸ்சி/எஸ்டி சிறப்பு திட்ட நிதியிலிருந்து எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முதலில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த நிதியும் வேறு திட்டங்களுக்கு மாற்றி பயன்படுத்தப்படவில்லை. அரசின் வரவு-செலவுத் திட்ட முறையின் படி, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் மொத்த நிதிக்குள் "பொது", "ஆதி திராவிடர்", "பழங்குடியினர்" என தனித்தனி கணக்கு தலைப்புகள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த நடைமுறை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்பட தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் போன்ற அனைத்து தனிநபர் பயனாளி சார்ந்த திட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி, அந்த சமூக பயனாளிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அந்த நிதியை வேறு சமூகங்களுக்கோ அல்லது வேறு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது. இது அரசின் நிலையான நிதி ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு, KMUT திட்டத்திற்கும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு தனி தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, KMUT திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்குவதற்கான கூடுதல் செலவு, இத்திட்டத்திற்கான தனி கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஆதி திராவிடர் பழங்குடியினர் திட்டங்களுக்கான நிதியில் இருந்து எடுக்கப்படவில்லை. எனவே, நிதி மாற்றம் நடந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது.
மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியை பாதுகாக்க அரசு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியுள்ளது. அந்தச் சட்டத்தின் படி, இந்த சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அவர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு நிதியாண்டில் பயன்படுத்தப்படாத தொகை இருந்தாலும், அது பொதுநிதியாக மாறாது. அடுத்த நிதியாண்டில் அதே நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுமையாக ஆதாரமற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளையும் நிதி ஒழுங்கையும் கடைப்பிடித்து, உரிய நிதி உரிய பயனாளிகளுக்கே சென்றடைவதை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.
எனவே, எந்த ஒரு திட்டத்துக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கான தனித் தலைப்பில் ஒதுக்கப்படும் நிதியை ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களில் இருந்து மாற்றி தருவதாக கூறுவது முற்றிலும் தவறானதாகும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்பட்ட நிதி, எஸ்சி/ எஸ்டி சிறப்பு திட்ட நிதி என தலித் விடுதலை இயக்கம், தேசிய பட்டியலினத்தவருக்கான ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் கருப்பையா அளித்துள்ள புகாரில் "SC/ST சிறப்பு உட்கூறு நிதியை துணை தலைப்பின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மடைமாற்றம் செய்துள்ளதாகவும், இதனை ஆணையம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications