நைட்டை விட பகலில்தான் அதிகம் விக்குதாம்.. எது தெரியுமா.. "இது"தான்.. சென்னைக்காரங்க பலேதான்!
இந்த ஊரடங்கில் ஆணுறைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாம்
சென்னை: ஆணுறை அதிகமாக விற்பனை ஆகி வருகிறதாம்.. அதுவும் நைட் நேரத்தில்விட பகல் நேரத்தில்தான் அதிகப்பேர் ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்களாம்.. இந்த வருடம் காண்டம் விற்பனையில் சென்னை லீடிங்கில் உள்ளது என்றால் நம்புவீர்களா? அப்படித்தான் ஒரு ஆய்வு சொல்கிறது.
இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதும், பலருக்கு வேலை இல்லை.. பெரும்பாலானோர் வீட்டிலேயே தான் முடங்கி கிடந்தனர்.
வருமானம் இன்றி தவிப்பது, பசியால் வாடுவது, வீட்டு வாடகை தர முடியாமல் அவஸ்தைப்படுவது என பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் சிக்கி தவித்தனர்.

முடக்கம்
அதேசமயம், வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்ததால், ஆணுறையும் விற்பனை அதிகமானது. இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன... இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது.. அதன்படி, டன்சோ ஆப் மூலமாக ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கும் நிலையில், இந்த ஆண்டில் ஆணுறை ஆர்டர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளதாம்.

ஆணுறைகள்
அதுமட்டுமல்ல, நைட் நேரங்களை விட, பகல் நேரங்களில்தான் அதிகப்பேர் ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார்களாம்.. அதாவது நைட் நேரங்களை விட பகல் நேரங்களில் 3 மடங்கு அதிகமாக ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளனர்... நகரங்களை பொறுத்தவரையில், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் அதிக பேர் ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 6 மடங்கு அதிகமாகவும், சென்னையில் 5 மடங்கு அதிகமாகவும், ஜெய்ப்பூரில் 4 மடங்கு அதிகமாகவும், மும்பையில் 3 மடங்கு அதிகமாகவும், பெங்களூருவில் 3 மடங்கு அதிகமாகவும் ஆர்டர் செய்துள்ளனர்... ஆணுறை மட்டுமல்லாமல், சிகரெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரோலிங் பேப்பரும் ஊரடங்கு காலத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோலிங் பேப்பர்
சென்னையை விட பெங்களூருவில் 22 மடங்கு அதிகமாக ரோலிங் பேப்பர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கருவுறுதலைக் கண்டறியும் கருவிகளும் ஊரடங்கு காலத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில்தான் அதிகளவு கருவுறுதலைக் கண்டறியும் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளவாம். அதேபோல, ஆர்டர் செய்யப்பட்ட உணவையும் பட்டியலிட்டுள்ளது. இதன்படி பெங்களூர் மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி... சென்னையில் இட்லி, மும்பையின் தால் கிச்சடி, கூர்கான் ஆலு டிக்கி பர்கர், புனே மேகி ஆகிய உணவுகளை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications