Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஜொல்’லால் ’ஜுவல்’லை விட்ட சேகர்! ஆசை காட்டி 550 பவுனை அமுக்கிய ஸ்வாதி! ஸ்டார் பாரில் குடித்தே காலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் வீட்டிலிருந்து 550 சவரன் தங்க நகைகளை மாடல் அழகிக்கு தொழில் அதிபர் ஒருவர் கொடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தொழிலதிபரிடம் பெற்ற நகைகளை குடித்தே அழித்து விட்டதாக அந்த இளம் பெண் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த தொழிலதிபரான சேகருக்கு திருமணமான நிலையில் தனது தம்பி ராஜேஸ், தாயார் தமிழ்ச்செல்வி, மனைவி குழந்தைகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

சேகர் பைனான்ஸ் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

550 சவரன் நகைகள்

550 சவரன் நகைகள்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது. இதையடுத்து ராஜேஸின் மனைவி நகை, தமிழ்ச்செல்வியின் நகை 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சொந்த வீட்டில் திருட்டு

சொந்த வீட்டில் திருட்டு

போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம்.

மாடல் அழகி

மாடல் அழகி

மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர் அவரது தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர் தோழியிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

 திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தன்னைவிட 18 வயது மூத்தவரான சேகர் தன்னிடம் பழகிய போது அவரிடம் ஏராளமான பணம் இருப்பது தெரிய வந்ததால் அவரை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். இதை அடுத்து சிறிது சிறிதாக பணம் நகை வாங்கியதோடு கார் சொகுசு பைக் ஆகியவற்றையும் கேட்டு வாங்கியுள்ளார்.

 பார்களில் உல்லாசம்

பார்களில் உல்லாசம்

தொடர்ந்து ஊட்டி கொடைக்கானல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததோடு சினிமாவில் நடிக்க பணம் தேவைப்படுகிறது என 70 லட்சம் கேட்டுள்ளார் அதற்கும் சேகர் ஒப்புக்கொண்ட நிலையில் அவரிடம் வாங்கிய நகைகளை விற்று செலவு செய்ததோடு ஆண் நண்பர்களுடன் பல ஊர்களுக்குச் சென்று சுற்றியுள்ளார் சுவாதி. மேலும் மது குடிப்பதில் அதிக விருப்பம் உள்ள அவர் சேகரிடம் பெற்ற நகைகளை விற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதிகளில் மது குடித்து செலவு செய்துள்ளதாக கூறி போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+