அடுத்தடுத்து 3 பேர் படுகொலை.. நேற்று கூட ஒருவர் வெட்டி கொலை!.. என்ன நடக்கிறது மயிலாப்பூரில்!
ஐஸ் அவுஸ் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை மர்மநபர்கள் துடிக்க துடிக்க விரட்டி சென்று கொன்ற சம்பவம் சென்னை நகர மக்களை உறைய வைத்துள்ளது.
திருவல்லிக்கேணியில் பிளாட்பாரத்தில் ஷேக் என்பவர் பிரியாணி கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷேக் கடையை மூடிவிட்டு வெளியே வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் 5 பேர் ஷேக்கை அரிவாளால் வெட்ட வந்தனர்.

காங்கிரஸ் பிரமுகர்
அந்த நேரத்தில் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் செயலாளரான அப்பாஸ், மற்றும் அவரது நண்பர்கள் நவாஷ், ரஹ்மான் ஷெரீப் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். திடீரென ஷேக்கை அரிவாளால் யாரோ வெட்ட முயன்றதை பார்த்ததும் இவர்கள் 3 பேரும் அதை விரைந்து சென்று தடுக்க முயன்றனர்.

3 பேரும் படுகாயம்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், நவாஸ், அப்பாஸ் மற்றும் செரீப்பை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி விட்டது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதோடு இந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

4 பைக்கில் 7 பேர்
காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சமீபத்தில்தான் வெளியே வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பென்ஸ் ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 4 பைக்கில் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து நின்றது. அப்பாஸை சுற்றிவளைத்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கியது.

உறைந்த பொதுமக்கள்
அப்பாஸ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் கும்பல் பைக்கில் மின்னலென தப்பி சென்றது. பொதுவாக மயிலாப்பூர் பகுதியில் எப்போதுமே கூட்டம் நிறைந்து இருக்கும். 10.30 மணி என்பதால் அப்போதும் ஜனநடமாட்டம் இருந்தது. இப்படி அப்பாஸை கும்பல் ஒன்று சுற்றிக் கொண்டு வெட்டி கொன்றதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

சிசிடிவி கேமரா
தகவல் அறிந்த ஐஸ்அவுஸ் போலீசார் விரைந்து வந்து அப்பாஸ் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தப்பி சென்ற கொலையாளிகளையும் தேடி வருகிறார்கள்.

சாலை மறியல்
இதனிடையே அப்பாஸ் பிரபலமான காங்கிரஸ் பிரமுகர் என்பதால், அவர் உயிரிழந்தை சம்பவத்தை கேள்விப்பட்டதும் கட்சி பிரமுகர்கள் அப்பகுதியில் அதிக அளவில் குவிய தொடங்கினார். பிறகு திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டு, குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

போலீசார் குவிப்பு
இதனால் ஐஸ் அவுஸ் பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. நிலைமை மோசமாகிவிட்டதை அறிந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது அங்கு பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பாஸ் கொலையுடன் சேர்த்து, மயிலாப்பூர் பகுதியில் மட்டும் 3 நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications