சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளவங்கோடு சட்டசபை தொகுதியில் என்னதான் நடக்கிறது? வேட்பாளர்களை பாஜக, காங். அறிவிக்காத மர்மம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர்களை சொல்லி வைத்தது போலவே காங்கிரஸும் அறிவிக்கவில்லை; பாஜகவும் அறிவிக்கவில்லை.

விளவங்கோடு சட்டசபை தொகுதியை பாஜக, காங்கிரஸ் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் விளவங்கோடு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

விளவங்கோடு வேட்பாளர்

விளவங்கோடு வேட்பாளர்

இன்று வெளியான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் விளவங்கோடு தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இன்று காலை திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய டாக்டர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியை கொடுத்திருக்கிறது பாஜக.

அந்த ஒருவருக்காக

அந்த ஒருவருக்காக

இதேபோல் அந்த ஒரு பிரமுகர் கட்சி தாவி வருகிறார் என காத்திருக்கிறதாம் பாஜக. இதனை முன்னரே தெரிந்து கொண்ட காங்கிரஸும் அவர் அதிகாரப்ப்பூர்வமாக தாவட்டும்; பின்னர் வேட்பாளரை அறிவிக்கலாம் என வெயிட்டிங்காம்.

கண்ணாமூச்சி ஆட்டம்

கண்ணாமூச்சி ஆட்டம்

பாஜகவோ, காங்கிரஸ் வேட்பாளரையே கபளீகரம் செய்துவிட்டோம் என பிரசாரம் செய்ய வேண்டும் என நினைக்கிறது. அந்த ஒரு பிரமுகரை முன்வைத்து பாஜகவும் காங்கிரஸும் விளவங்கோட்டில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகின்றன.

பாஜகவுக்கு ஏற்கனவே அதிர்ச்சி

பாஜகவுக்கு ஏற்கனவே அதிர்ச்சி

ஏற்கனவே ஒரு தொகுதியில் இப்படித்தான் பாஜக இலவு காத்த கிளியாக ஒரு பிரமுகருக்கு காத்திருந்தது. ஆனால் அந்த பிரமுகர் பாஜகவுக்கு ஓகே என சொல்லிவிட்டு சொந்த கட்சியிலேயே சீட் வாங்கிவிட்டார். இதனால் பாஜக அதிர்ந்து போனது குறிப்பிடதிதக்கது.,

English summary
Congress and BJP Not announce the candidate for Vilavancode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X