Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக.. காங்கிரஸ்.. ஒரே மாதிரி ஒரே குரலில்.. சொன்னதை கேட்டு! ஒரு நிமிடம் வெளிறிப்போன கமல்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணையும் பட்சத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு இரண்டு கட்சிகளும் முக்கியமான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Congress and DMK want MNM Kamal Haasan to contest in the DMK alliance with their own symbols

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் கூட்டணி: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாம். எங்களுக்கு கொடுக்கப்படும் இடங்களில் போட்டியிட வேண்டும் என்றால்.. எங்களின் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசும் ஒரு சேர சொல்லிவிட்டதாம்.

அதாவது திமுகவின் கூட்டணியில் இடம் கிடைத்தால்.. திமுகவின் சின்னம்.,. அதுவே காங்கிரசுக்கு வழங்கப்படும் இடங்களில் உள்ஒதுக்கீடு கிடைத்தால் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கேட்டு இருக்கிறதாம். இரண்டு கட்சிகளின் கோரிக்கையை கமல் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.. இரண்டு கட்சிகளின் கோரிக்கையால் கமல் முகமே கொஞ்சம் வெளிறிவிட்டதாம் . அப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் எப்படியாவது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட முயன்று வருகிறாராம். அதற்காகவே டார்ச் லைட் சின்னத்தை கஷ்டப்பட்டு வாங்கினேன் என்று கமல் கூறி வருகிறாராம்.

எந்த தொகுதி: 2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வருகிறார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட தமிழ்நாட்டில் இந்த இந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது.

கோவையில் போட்டி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசி இருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை இந்த வாரம் இறுதியில் கமல்ஹாசன் சந்தித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட திட்டமிட்டுள்ள சிபிஎம் கட்சிக்கு வேறு இடம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

வேறு தொகுதியா? : கோயம்புத்தூர் இல்லையென்றால் பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் சென்னையை கமல் விரும்பினாலும்.. அங்கே மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் நிற்க வைக்கப்படலாம் என்கிறார்கள்.

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் பெரம்பலூர் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.

இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தர் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் போட்டியிட சிபிஎம் விரும்பும் பட்சத்தில்.. பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல்.. கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+