மேலூர் தொகுதி வேட்பாளர் யார்? நிறுத்தி வைத்துள்ள காங்கிரஸ் மேலிடம்.. பின்னணியில் மாணிக்கம் தாகூர்?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதற்கான காரணம் தொடர்பாக காங்கிரஸ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி உடனான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இது கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி தொகுதி துரை சந்திரசேகர், வேளச்சேரி ஹசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, சோளிங்கர் முனிரத்தினம், பென்னாகரம் ஜிகேஎம் தமிழ்க்குமரன், அறந்தாங்கி டி.ராமச்சந்திரன், குளச்சல் தாரகை கட்பத், கிளியூர் ராஜேஷ் குமார், கடலூர் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலூர் தொகுதி கடந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பாக டி ரவிச்சந்திரன் போட்டியிட்டு சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இவர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் மாமனார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே மேலூர் தொகுதியை விடுத்து மதுரை வடக்கு தொகுதியை குறி வைத்து மாணிக்கம் தாகூர் பேசி வந்ததாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களாகவே மாணிக்கம் தாகூர் தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் சூழலில், மேலூர் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படாததற்கு இவர் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications